» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பள்ளி மாணவர்கள் ஓட்டிவந்த பைக்குகள் பறிமுதல்: பெற்றோர்களை வரவழைத்து போலீசார் எச்சரிக்கை!!
வெள்ளி 12, ஜனவரி 2018 10:41:13 AM (IST)

கோவில்பட்டியில் பள்ளி மாணவர்கள் ஓட்டிவந்த பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து அறிவுரை வழங்கினர்.
தூத்துக்குடி மாவட்டம் இந்தாண்டு விபத்தில்லா மாவட்டமாக உருவாக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மகேந்திரன் தலைமையில் மாவட்டம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், துண்டுபிரசுரம் விநியோகம் என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்கள், ஓட்டுநர் உரிமம் இல்லமால் பைக்குகளை ஓட்டும் இளைஞர்களை கண்காணிப்பு செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கோவில்பட்டி பகுதியில் ஏராளமான பள்ளி மாணவர்களுக்கு அவர்களுடைய பெற்றோர்கள் டியூசன் செல்வதற்காக பைக்குகளை வாங்கி தருகின்றனர்.ஓட்டுநர் உரிமம் இல்லாமல், சிறுவயதிலே மாணவர்களுக்கு பைக் ஓட்ட தருவதால் விபத்துக்கள் ஏற்படும் நிலை உருவாகி வருகிறது. இந்த விபத்துக்களை தடுக்கும் பொரூட்டு கோவில்பட்டி பகுதியில் பைக் ஓட்டிய பள்ளி மாணவர்கள், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பைக் ஓட்டிய இளைஞர்களின் பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தது மட்டுமின்றி, பைக் ஓட்டியவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் வைத்து மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் ஆகியோரை வரவழைத்து டி.எஸ்.பி.ஜெபராஜ் எச்சரித்து, மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பினர். மேலும் அடுத்தமுறை பைக் ஓட்டிவந்தால், பைக் யார் பெயரில் இருக்கோ அவங்க ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுவது மட்டுமின்றி அபாரதம் விதிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் விபத்துக்களை தடுக்கவும், இளைஞர்கள், மாணவர்கள் பைக்ரேசில் ஈடுபடுவதை தவிர்க்கவும் இந்த நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்
மக்கள் கருத்து
மக்கள்Jan 12, 2018 - 10:53:12 AM | Posted IP 61.3.*****
சூப்பர் போலீஸ் ... தூத்துக்குடியில் இது போன்று நடவடிக்கை தேவை ....
மேலும் தொடரும் செய்திகள்

புனித லூக்கா செவிலியர் கல்லூரி பட்டமளிப்பு விழா
வியாழன் 19, ஏப்ரல் 2018 3:21:24 PM (IST)

எச்.ராஜா உருவ பொம்மையை எரித்த திமுக மகளிரணி
வியாழன் 19, ஏப்ரல் 2018 1:44:35 PM (IST)

துாத்துக்குடியில் பொதுமக்களை அச்சுறுத்தும் பள்ளம் : அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
வியாழன் 19, ஏப்ரல் 2018 1:31:57 PM (IST)

குடிநீர் பாட்டில்களின் தரத்தை இணையதளம் மூலம் அறியலாம் : போலிகள் குறித்து புகார் அளிக்கலாம்!
வியாழன் 19, ஏப்ரல் 2018 12:43:51 PM (IST)

குடிசை மாற்று வாரியத்தின் மூலம் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு: அமைச்சர், ஆட்சியர் அடிக்கல் நாட்டினர்!!
வியாழன் 19, ஏப்ரல் 2018 12:00:47 PM (IST)

ஸ்டெர்லைட் அதிகாரியின் கார் கண்ணாடியை உடைத்து லேப்டாப் திருட்டு: தூத்துக்குடியில் பரபரப்பு!!
வியாழன் 19, ஏப்ரல் 2018 11:32:22 AM (IST)

நிஹாJan 12, 2018 - 12:08:00 PM | Posted IP 59.93*****