» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் இருந்து விரைவில் பயணிகள் கப்பல் துவங்கும் : வஉசி துறைமுக சபை துணை தலைவர் பேட்டி

வியாழன் 11, ஜனவரி 2018 12:56:17 PM (IST)தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு வாரம் இருமுறை சரக்கு பெட்டகம் அனுப்பும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

விழாவில் வஉசி துறைமுக சபை துணைதலைவர் நடராஜன் சேவையை துவக்கி வைத்தார்.ட்ராபிக் மேலாளர் ராஜேந்திரன், துணை பாதுகாப்பு அதிகாரி பாபாதோஷ் சந்த், டிபிஜிடி சிஇஓ எரிக் லேவன்யூ, சாக்கியாத் ஷிப்பிங் கம்பெனி சங்கர் மேனன்,எம்வி சார்லி கப்பல் கேப்டன் ஓலக் அனாஸ்கின்,எப்ஏஆர் ஷிப்பிங் ஏஜன்சி சாமுவேல் பென்னட்,டிபிஜிடி சிஓஓ (இயக்கம்) பீட்டர், ஆகியோர் கலந்து கலந்து கொண்டனர்.

பின்னர் வஉசி துறைமுக சபை துணைதலைவர் நடராஜன் செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. இந்த கப்பல் சேவை பல்வேறு பிரச்சனைகள் காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் மத்திய அரசு தமிழ்நாடு கடலோர பகுதிகளில் படகு போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்த ஆர்வம் காட்டி வருகிறது. 

இதனால் கடலோரங்களில் படகு இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டன. அதன் அடிப்படையில் தூத்துக்குடியை மையமாக கொண்டு படகு சேவை தொடங்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து பயணிகள் படகுகளை இயக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக தூத்துக்குடி& கன்னியாகுமரி&திருவனந்தபுரம், தூத்துக்குடி&ராமேசுவரம் ஆகிய இடங்களுக்கு படகு போக்குவரத்து சேவை தொடங்கப்பட உள்ளது. 

மேலும் தூத்துக்குடியில் இருந்து கன்னியாகுமரி, திருவனந்தபுரம், ராமேசுவரத்துக்கு சுற்றுலா படகு மற்றும் பயணிகள் படகு இயக்குவதற்கு விரும்புகிறவர்கள் ஆன்லைன் மூலம் வ.உ.சி.துறைமுகத்தில் வருகிற 31 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் உள்ள கப்பல் தளம், கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் தளம், ராமேசுவரம் மண்டபத்தில் உள்ள கப்பல் தளங்களும் பயன்படுத்தப்படுகிறது. இது தவிர படகு இயக்குபவர்கள் ஏதேனும் முக்கிய ஊர்களில் படகு இறங்கு தளம் அமைக்க விரும்பினால், அதற்கு அரசு மானியம் வழங்க இருப்பதாகவும், மக்களின் வரவேற்புக்கு ஏற்ப பல்வேறு நகரங்களுக்கு படகு இயக்கவும், உரிய கட்டணம் நிர்ணயிக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

முருகானந்தம்Jan 11, 2018 - 05:21:26 PM | Posted IP 122.1*****

சென்னை - கடலூர் - வேதாரண்யம் - ராமேஸ்வரம் - தூத்துக்குடி - கன்னியாகுமரி பயணிகள் மற்றும் உள்ள நாட்டு சரக்கு போக்குவரத்துக்கு வழி செய்தால் இந்த திட்டம் வளர்ச்சி பெரும் .அதுவும் தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இந்த திட்டம் செயல் பட வேண்டும் .புதிய துறைமுகத்தில் செயல் படுத்தினால் மக்களுக்கு உகந்ததாக இருக்காது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

New Shape Tailors

Universal Tiles Bazar

selvam aqua
Johnson's Engineers

Thoothukudi Business Directory