» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

போர்க் லிப்ட் வாகனம் மோதி லோடுமேன் பரிதாப சாவு

வியாழன் 11, ஜனவரி 2018 10:59:57 AM (IST)

தூத்துக்குடியில் போர்க் லிப்ட் வாகனம் மோதியதில், தவறி விழுந்து படுகாயம அடைந்த லோடு மேன் பரிதாபமாக இறந்தார். 

சென்னை ராயபுரத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி மகன் மாரியப்பன் (50). இவருக்கு மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். இவர், தூத்துக்குடியில் உள்ள லாரி செட்டில் தங்கியிருந்து லோடு மேனாக வேலைபார்த்து வருகிறார். நேற்று இரவு செந்திலாம்பண்ணை கிராமத்தில் உள்ள தனியார் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் சரக்குகளை லாரியில் ஏற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். 

அப்போது எதிர்பாராதவிதமாக போர்க் லிப்ட் வாகனம் மோதி தவறி விழுந்தாராம். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன்றி உயிரிழந்தார். இதுகுறித்து தட்டபாறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


crescentopticals



Johnson's Engineers

Friends Track CALL TAXI & CAB (P) LTD









Thoothukudi Business Directory