» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நிச்சயித்த பெண்ணிடம் அத்துமீறிய ஆசிரியர் கைது

திங்கள் 8, ஜனவரி 2018 5:09:18 PM (IST)

நிச்சயம் செய்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த தனியார் பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி விவி ரோட்டைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் ரமேஷ்குமார் (33). தனியார் பள்ளிஆசிரியர். இவருக்கும், பாளையங்கோட்டை அகில இந்திய வானொலி நிலைய குடியிருப்பைச் சேர்ந்த அருளன் மகள் அகல்யா(25)என்பவருக்கும் திருமணம் பேசி நிச்சயதார்த்தம் நடந்தது. அகல்யா பிஇ முடித்துள்ளார். 

இந்நிலையில் ரமேஷ்குமார், அகல்யாவுடன் அடிக்கடி போனில் பேசி ஆசை வார்த்தை கூறி வந்தார். மேலும் அகல்யாவின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவருடன் உல்லாசமாக இருந்தாக தெரிகிறது. அதன் பிறகு அவர், திருமணம் செய்ய மறுத்து விட்டாராம். இதுகுறித்து பாளை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அகல்யா புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு)பத்மாவதி வழக்கு பதிந்து ரமேஷ்குமாரை கைது செய்தார்.


மக்கள் கருத்து

வடிவேல்Jan 13, 2018 - 12:55:54 PM | Posted IP 106.2*****

கல்யாணத்திற்கு முன்னாடியே அவசர பட்டுவிட்டியே அகல்யா. இது மாதிரி வேறு யாருகூடயாவது ஏற்கனவே நடந்து இருப்பியோன்னு சந்தேக படுறப்புள்ள.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Johnson's Engineerscrescentopticals


Friends Track CALL TAXI & CAB (P) LTD


Thoothukudi Business Directory