» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரஜினியால் 6 மாதம் கூட அரசியலில் தாக்கு பிடிக்க முடியாது : கீதாஜீவன் எம்எல்ஏ பேச்சு

வெள்ளி 5, ஜனவரி 2018 3:49:41 PM (IST)ரஜினியால் 6 மாதம் கூட அரசியலில்  தாக்கு பிடிக்க முடியாது  என தூத்துக்குடியில் நடந்த திமுக பிரதிநிதிகள் கூட்டத்தில் கீதாஜீவன் எம்எல்ஏ பேசினார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பிரதிநிதிகள் கூட்டம் கலைஞர் அரங்கில் மாவட்ட அவைத் தலைவர என்.கே.பெருமாள் தலைமையில் நடந்தது.  பொதுக்குழு உறுப்பினர் என்பி ஜெகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ கலந்து கொண்டு கூறியதாவது: ஆர்கே நகர் தொகுதியில் நாம் சிறப்பாக பணியாற்றினோம். ஆனால், ஒட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்றுவிட்டார்கள். அந்த பணத்தையும் கொடுக்காமல் ஏமாற்றி அல்வா கொடுத்துவிட்டார்கள். நாம் பணியாற்றியதில் தளபதிக்கு மகிழ்ச்சி. அதற்காக அவர் நம்மை பாராட்டியுள்ளார்.

தற்போது நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்துள்ளார். அவரால் அரசியலில் 6 மாதம் கூட தாக்குபிடிக்காது. ஆனால், இதற்கு முன்பாக கட்சி ஆரம்பித்த விஜயகாந்த் 5 ஆண்டுகளுக்கு தாக்குபிடித்துள்ளார். அவரையும் இப்போது காணவில்லை. திமுகவில் தூத்துக்குடி மாவட்டத்தில் உறுப்பினர்களை அதிகளவில் சேர்த்து தமிழகத்திலேயே முதல் மாவட்டம் என்ற பெயர் வாங்க வேண்டும். விரைவில் தேர்தல் வரவுள்ளது. அது உள்ளாட்சித் தேர்தலாகவோ அல்லது சட்டமன்ற தேர்தலாகவோ இருக்கலாம். நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரே கடைசி கூட்டமாகக் கூட இருக்கலாம். எனவே, நாம் தேர்தலுக்கு தயாராக இருக்கவேண்டும். திமுக வெற்றி பெற கழகத்தினர் அனைவரும் ஒருங்கிணைந்து களப்பணி ஆற்ற வேண்டும். எங்கு பிரச்சனை தோன்றினாலும், முதல் ஆளாக திமுகவினர் குரல் கொடுத்து போராட்டம் நடத்த வேண்டும் என்றார். 

தீர்மானங்கள் 

கூட்டத்தில் பொங்கல் திருநாளை தமிழ்புத்தாண்டாக கொண்டாடுவது, கழக கொடியேற்றி இனிப்புகள் வழங்கி, ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி உற்சாகமாக கொண்டாட வேண்டும் எனவும், பொங்கல் விழா போட்டிகளை நடத்தி மாணவ, மாணவியர்களுக்கு பரிசு வழங்க வேண்டும், ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதல் நிவாரண உதவி, வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும், விவசாயிகளுக்கு பயிர் காப்பிட்டுத் தொகை வழங்க வே்ணடும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும். 

திமுகவில் இணைந்த தொழிலதிபர் 

முன்னதாக தொழிலதிபர் எஸ்டி பொன்சீலன், கீதாஜீவன் எம்எல்ஏவுக்கு சால்வை அணிவித்து திமுகவில் இணைந்தார். மேலும், லயன்ஸ் டவுண் பகுதியைச் சேர்ந்த 50பேர் திமுகவில் இணைந்தனர். கூட்டத்தில திமுக மாவட்ட நிர்வாகிகள் ராஜ்மோகன் செல்வின், ஏஞ்சலா, ரவீந்திரன், ஜெயகுமார் ரூபன் மாநகர அவைத் தலைவர் ஆறுமுகம், முன்னாள் முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம், கவுன்சிலர்கள் கோட்டுராஜா, பாலகுருசாமி, கீதாமுருகேசன், சுரேஷ்குமார், பிரதீப் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

unmaiJan 14, 2018 - 07:42:08 AM | Posted IP 8.37.*****

உண்மை

வடிவேல்Jan 13, 2018 - 01:04:59 PM | Posted IP 106.2*****

ஆர் கே நகர் இடை தேர்தலில் உங்க லட்சணத்தை பார்த்தாச்சு. இன்னுமா உனக்கு இந்த பேச்சு.

ஸ்.சிவராமன்.Jan 8, 2018 - 11:18:46 AM | Posted IP 61.3.*****

காமெடி.பண்ணாதீங்க.அக்கா.

மக்கள்Jan 6, 2018 - 01:31:57 PM | Posted IP 122.1*****

முதல்ல நீ டெபாசிட் வாங்குவியனு பாரு

சாமிJan 5, 2018 - 09:29:29 PM | Posted IP 117.2*****

டெபாசிட் வாங்கக்கூட இப்ப தெம்பில்லை

nnnnnJan 5, 2018 - 06:05:48 PM | Posted IP 106.2*****

1996 இல் ரஜினியால் திமுக வெற்றி பெறும்போது சொல்லவில்லை இப்போ எதுக்கு பயமா சி த செல்லப்பாண்டியன் கூடவே போட்டி போடமுடியலை இதுல ரஜினியை என்னத்த சொல்ல

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing

crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTDNew Shape Tailors
Thoothukudi Business Directory