» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நிதி மோசடி: கூட்டுறவு கடன் சங்க தலைவர் கைது – மேலும் 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

வெள்ளி 29, டிசம்பர் 2017 9:42:18 PM (IST)



போலி ஆவணங்களை தயாரித்து வெள்ள நிவாரண நிதியில் ரூ.1.63 லட்சம் மோசடி செய்த கடன் சங்க தலைவரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள செட்டிகுறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 2013 -15 ஆண்டு கால கட்டத்தில் வழங்கப்பட்ட வெள்ள நிவாரண நிதி வழங்குவதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக வந்த புகார்களை தொடர்ந்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க இணை பதிவாளர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டதில் போலியாக ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, சுமார் 1லட்சத்து 63 ஆயிரத்து 275 ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது தெரியவந்தது. 

இதனை தொடர்ந்து கோவில்பட்டி தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்க இணை பதிவாளர் பெருமாள் கொடுத்த புகாரின் பெயரில் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் செட்டிகுறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் நட்டார், கிளார்க் கோவிந்தராஜ் மற்றும் சங்க தவைர் சின்னராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து சின்னராஜை கைது செய்துள்ளனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய நட்டார் மற்றும் கோவிந்தராஜை தேடிவருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



crescentopticals






Friends Track CALL TAXI & CAB (P) LTD

Johnson's Engineers





Thoothukudi Business Directory