» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கார் - மினிவேன் மோதல்: புதுமண தம்பதி உள்பட 5 பேர் பலி : ஜவுளி எடுத்து வந்தபோது சோகம்

திங்கள் 25, டிசம்பர் 2017 5:05:14 PM (IST)



கோவில்பட்டி அருகே கார் - மினிவேன் மோதி விபத்துக்குள்ளனாதில் புதுமண தம்பதி உள்பட 5 பேர் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். 

விருதுநகர் மாவட்டம், சிவகாசியை சேர்ந்தவர் தீனதாயளன். இவர் தனது குடும்பத்துடன் பொங்கல் பண்டிகைக்கு ஜவுளி எடுப்பதற்காக மனைவி கனகவள்ளி, மகள்கள் ஆனந்த லெட்சுமி, திவ்யா ஜோதி மற்றும் தீனதாயளன் தயார் வரதராஜ மணி, ஆனந்தலெட்சுமி  கணவர் சரவணக்குமார் ஆகியோருடன் திருநெல்வேலிக்கு காரில் சென்றுள்ளார். அங்குள்ள கடை ஒன்றில் ஜவுளி எடுத்து விட்டு அனைவரும் சிவகாசிக்கு திரும்பியுள்ளார். காரை சரவணக்குமார் ஓட்டிவந்துள்ளனர். கோவில்பட்டி நாலாட்டின்புதூர் அருகே தேசிய நெடுஞ்சாவையில் வந்த போது கார் திடீரென தனது கட்டுப்பாட்டினை இழந்து, எதிரே வந்த மினிலாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.  

இதில் தீனதயாளன், கனகவள்ளி, ஆனந்தலெட்சுமி, சரவணக்குமார் வரதராஜமணி மற்றும் கார் ஓட்டி வந்த டிரைவர் ஆகியோர் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் காரில் வந்த திவ்யா, மினி லாரி டிரைவர் பாலமுருகன், கீளினர் பாண்டியராஜன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்தும் நாலாட்டின்புதூர் போலீசார் விரைந்து சென்று காயமடைந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்தில் உயிரிழந்த ஆனந்தலெட்சுமி, சரவணக்குமார் இருவருக்கும் கடந்த மாதம் தான் திருமணம் நடைபெற்றுள்ளது. புதுமண தம்பதிக்கு தலை பொங்கலுக்கு ஜவுளி எடுத்துவிட்டு வரும் போது தான் இந்த விபத்து நடந்துள்ளது. 



டயர் வெடித்தோ இல்லது பிரேக் கட் ஆகிய காரணத்தினால் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. விபத்து நடைபெற்ற இடத்தினை மாவட்ட எஸ்.பி.மகேந்திரன் மற்றும் டி.எஸ்.பி. ஜெயபராஜ் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விபத்து குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Johnson's Engineers



crescentopticals



Friends Track CALL TAXI & CAB (P) LTD




Thoothukudi Business Directory