» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்பது மக்கள் எண்ணம் - விக்கிரம ராஜா பேட்டி

ஞாயிறு 17, டிசம்பர் 2017 9:44:03 PM (IST)



ஆர்.கே.நகர் இடைதேர்தல் காரணமாக வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்பது மக்கள் எண்ணமாக இருப்பதை அறிய முடிகிறது என்று வணிகர் சங்கங்களின் பேரரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டியில் வட்டார சிறிய உணவுப்பொருள்கள் தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர்கள் நலச்சங்கத்தின் 6ம் ஆண்டு விழா பசுவந்தனை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கடலை மிட்டாய்க்கு ஜி.எஸ்.டியில் இருந்து வரி விதிப்பு குறைக்கப்பட்டதற்கு மத்திய, மாநில அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 

உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயம் சட்டம் குறித்து வணிகர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், மேலும் லைசன்ஸ் பெற மேலும் 6மாத காலம் அவகாசம் அளிக்க வேண்டும், அபராதம், சிறை என்று அதிகாரிகள் மிரட்டுவதை கைவிட வேண்டும், கடை, வீடுகளுக்கு வரி மறுசீரமைப்பு செய்ய அலுவலர்கள் லஞ்சம் கேட்பதாக தகவல் கிடைத்துள்ளது, நியமான முறையில் வரி விதிப்பு செய்ய வேண்டும் என்றார். ஆர்.கே.நகர் இடைதேர்தல் காரணமாக வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பணம் யார் கொண்டு செல்கின்றார்கள், எங்கு போகிறது என்று அதிகாரிகளுக்கு தெரியும் ஆனால் சோதனை என்ற பெயரில் வணிகர்கள் கொண்டு செல்லும் பணத்தினை பிடிக்கின்றனர். 

வாக்காளர்கள் ஓட்டிற்கு பணம் வாங்க வேண்டாம் என்பதனை எங்கள் அமைப்பு வலியுறுத்துகிறது. பணம் விளையாடிக் கொண்டு இருக்கிறது. இந்த இடைத்தேர்தலை தள்ளி வைத்து, மீண்டும் தேர்தல் நடத்த  வேண்டும் என்பது மக்கள் எண்ணமாக இருப்பதை அறிய முடிகிறது- ஓட்டுக்கு 10 ஆயிரம் வரை கொடுக்கப்படுகிறது. உள்நாட்டு குளிர்பானங்கள் உற்பத்திக்கு மத்திய,மாநில அரசுகள் சலுகைகள் அளித்து ஊக்குவித்தால் வெளிநாட்டு குளிர்பானங்கள் இங்கு முழுவதுமாக தடைசெய்யப்பட வாய்ப்பு உள்ளது. ஜி.எஸ்.டி.வரியால் பேக்கரி தொழில் முற்றிலுமாக பாதிகப்பட்டுள்ளது. அலுமினிய பொருள்கள் வாங்கினாலும், வரி, விற்பனை செய்தாலும் வரி என்ற நிலை உள்ளது. 

அரிசி, பேக்கரி, அலுமினிய பாத்திரம் உள்ளிட்ட அன்றாட வீட்டு உபயோகப்பொருள்களுக்கு ஜி.எஸ்.டி வாரியை குறைக்க வேண்டும், 28 சதவீதம் என்பதனை குறைக்க வேண்டும், ஜி.எஸ்.டி அமுல்படுத்தப்பட்ட பின் 81 பொருள்களுக்கு வரி குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம், அதில் 50 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் டெல்லியில் 22,23ல் நடைபெறும் ஜி.எஸ்.டி ஆலோசனைக்கூட்டத்தின் போது அமைச்சர்களின் சந்தித்து பேசவுள்ளோம். அதில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கவுள்ளோம், அது நிறைவேற்றவில்லை என்றால் போராட்டம் நடத்துவது குறித்து அறிக்கப்படும் என்றார். பேட்டியின் போது விருதுநகர்-தூத்துக்குடி மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், வடக்கு மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Joseph Marketing




New Shape Tailors

crescentopticals


Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory