» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நடிகர் ரஜினிகாந்த் கல்வி அறக்கட்டளை சார்பில் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா

ஞாயிறு 17, டிசம்பர் 2017 4:35:11 PM (IST)கோவில்பட்டி அருகேயுள்ள வேலாயுதபுரத்தில் ரஜினிகாந்த் 68வது பிறந்த நாளை முன்னிட்டு  ரஜினிகாந்த் கல்வி அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரஜினிகாந்த் நற்பணி மன்ற தலைவர் முருகன் தலைமை வகித்தார். ரஜினிகாந்த் கல்வி அறக்கட்டளை தலைவர் முருகன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட ரஜினிகாந்த் நற்பணி மன்ற செயலாளர் டக்லஸ் கலந்து கொண்டு 1000பள்ளி மாணவ- மாணவிகளுக்கு சிலோடு, புத்தகம், என்கணித வாய்ப்பாடு மற்றும் புத்தக பை உள்ளிட்ட உபகரணங்களை வழங்கினார். தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் ஸ்டாலின், மாவட்ட துணை தலைவர் துரைராஜ், மாவட்ட பொருளாளர் லட்சுமணராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தனசேகரன், கோவில்பட்டி நற்பணி மன்ற செயலாளர் மகேஷ்பாலா, பொருளாளர் ராஜாமணி, துணைத்தலைவர் கருப்பசாமி, துணை செயலாளர் சந்திரசேகர், ரஜினிகாந்த் கல்வி அறக்கட்டளை பொருளாளர் மகாலிங்கம், துணை தலைவர் வேலுச்சாமி, இணை செயலாளர்கள் பழனிச்சாமி, பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் ரஜினிகாந்த் கல்வி அறக்கட்டளை செயலாளர் ஜோதிகாமாட்சி நன்றி கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads


Joseph Marketing
New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD


crescentopticalsThoothukudi Business Directory