» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் கொசு விஷபூச்சிகள் ஒழிப்பு பணி

ஞாயிறு 17, டிசம்பர் 2017 4:29:00 PM (IST)கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையம் அருகேயுள்ள பகுதி சுபா நகர். வளர்ந்து வரும் பகுதியான இப்பகுதியில் அடந்த செடிகள் காணப்படுவதால் கொசு தொல்லையால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் விஷ தன்மையுள்ள பூச்சிகள் அதிகமாக காணப்படுவதால் ஒருங்கிணைந்த நியூ சுபாநகர், நியூ டவுண் மக்கள் நலச்சங்கத்தினர் இன்று கொசு மற்றும் விஷபூச்சிகள் ஒழிக்கும் பணியினை தொடங்கினர். 

நிகழ்சிக்கு ஒருங்கிணைந்த நியூ சுபாநகர், நியூ டவுண் மக்கள் நலச்சங்க தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். செயலாளர் குமார் முன்னிலை வகித்தார். பொருளாளர் சுரேஷ்குமார் வரவேற்புரையாற்றினார். இதில் துணை தலைவர் சுப்பிரமணியன் துணை செயலாளர் சங்கர சுப்பையா, கௌரவ ஆலோசகர்கள் காளியப்பன், சரவணன், ராஜேந்திரன், செய்தி தொடர்பாளர் ரெங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads


New Shape TailorsJoseph Marketing

crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Thoothukudi Business Directory