» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மதபோதகர் கொலையில் 3பேர் கைது: பரபரப்பு தகவல்

வெள்ளி 15, டிசம்பர் 2017 10:30:26 AM (IST)

தூத்துக்குடியில் பெந்தகொஸ்தே போதகர் கொலை வழக்கில் அண்ணன், தம்பி உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரது கொலைக்கான காரணம் குறித்தும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளன. 

சென்னை, பெரம்பூர் அருகேயுள்ள மங்களபுரத்தைச் சேர்ந்தவர் கனகராஜ்(74). தூத்துக்குடி மில்லர்புரம் பெந்தகொஸ்தே சபை போதகரான இவர், சபை ஊழியர்கள் தங்கும் இடத்தில் உள்ள கட்டிடத்தின் மேல் மாடியில் கூரை அமைத்து தங்கியிருந்தார். கடந்தாண்டு செப். 5ம் தேதி படுக்கையில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். இதுகுறித்து அவரது உறவினர் சுதர்சனன் கொடுத்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். பிரேத பரிசோதனையில் போதகர் கனகராஜ் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. 

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இவ்வழக்கில் துப்பு துலங்காத நிலையில், எஸ்பிமகேந்திரன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் அரிஹரன், தனிப்பிரிவு எஸ்ஐ ஷியாம் சுந்தர் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர், தீவிர விசாரணை மேற்கொண்டனர். சபையில் பணியில் இருந்த நாகர்கோவில் அருகேயுள்ள வாத்தியார் விளையைச் சேர்ந்த டைட்டஸ்(31)என்ற மற்றொரு போதகரிடம் நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தார். அவரது செல்போன் எண்ணை ஆய்வு செய்ததில் அவர்களது சந்தேகம் உறுதியானது. இதையடுத்து அவரை கைது செய்து நடத்திய தீவிர விசாரணையில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகின. கொலை செய்யப்பட்ட போதகர் கனகராஜ் ஒழுங்கு நடவடிக்கை மற்றும் கணக்கு வழக்குகளில் கறாராக இருந்துள்ளார். 

வெளியிடங்களுக்கு போதகம் செய்ய சென்ற டைட்டஸ் மீது பாலியல் புகார்கள் எழுந்ததையடுத்து கனகராஜ் அவரை கண்டித்து வெளியிடங்களுக்கு ஊழியத்திற்கு அனுப்பாமல் தலைமையிடத்தில் பணியில் வைத்துள்ளார். இது அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. மேலும் காய்கறிகடை நடத்தும் அவரது சகோதரர் அன்றோ (29) மற்றும் அன்றோ நண்பரான கோட்டாறை சேர்ந்த ரகு(35) ஆகியோரிடம் இதுபற்றி தெரிவித்துள்ளார். இதையடுத்து 3பேரும் திட்டமிட்டு கடந்த செப். 4ம்தேதி நள்ளிரவு போதகர் கனகராஜ் தூங்கும்போது அவரது முகத்தை தலையணையால் அழுத்தி கொலை செய்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து அன்றோவை கைது செய்த போலீசார், தலைமறைவாக இருந்த ரகுவை நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsJoseph Marketing

crescentopticalsFriends Track CALL TAXI & CAB (P) LTD


New Shape Tailors
Thoothukudi Business Directory