» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெயரளவில் மட்டுமே விரைவு பஸ்: பயணிகள் அவதி

வியாழன் 7, டிசம்பர் 2017 10:29:39 AM (IST)



சாத்தான்குளம் போக்குவரத்து பணிமனைக்கு  விரைவு பஸ்களுக்கு  பழைய பாழடைந்த பஸ்களை வழங்கி வருவதால் ஊழியர்கள் மற்றும் பயணிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனை கடந்த ஆண்டு தொடங்கப் பட்டது. போதிய அடிப்படை வசதிகள் இல்லை. இங்கிருந்து 5 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனிடையே நெல்லை பணிமனையில் இருந்து நெல்லை -சாத்தான்குளம் இடையே இடைநில்லா பேருந்து (எல்எஸ்எஸ்) இயக்கப்பட்டது. கட்டணம் ரூ.27 ஆகும். வண்டி பராமரிப்பு மற்றும் வழியோர பகுதிகளில் நின்று செல்லாது என்பதால் பயணிகள் மத்தியில் வரவேற்பு இருந்தது. இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.14 ஆயிரம் வரை வசூலானது. இந்த பஸ் தற்போது சாத்தான்குளம் பணிமனைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதனால்  நெல்லை - சாத்தான்குளம் இடையே நல்ல நிலையில் இயக்கப்பட்டு வந்த அரசு பஸ், வேறு வழித்தடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து பராமரிப்பு இன்றி கண்டம் செய்யப்படும் நிலையில் காணப்படும் டாப்பா பஸ், சாத்தான்குளத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பஸ்போர்டில் மட்டுமே எல்எஸ்எஸ் என்ற வாசகம் இருக்கிறது. செயலில் அனைத்து வழித்தடங்களில் நின்று செல்வதால் பயணிகள் கூடுதல் கட்டணம் செலுத்தியும் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் இந்த டப்பா பஸ்கள், அடிக்கடி பழுதாகி சாலையில் ஓய்வெடுக்கும் நிலை காணப்படுகிறது. எனவே சாத்தான்குளம்- நெல்லை இடையே ஏற்கனவே நல்ல நிலையில் இயங்கி வந்த அரசு பஸ்சை மீண்டும் இயக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் மற்றும் பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

selvam aqua

Nalam Pasumaiyagam



Johnson's Engineers


New Shape Tailors



Universal Tiles Bazar



Thoothukudi Business Directory