» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பிரபல ரவுடி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி

புதன் 6, டிசம்பர் 2017 6:44:43 PM (IST)

கோவில்பட்டியில் பிரபல ரவுடி விஷம் அருந்தி தற்கொலை முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவில்பட்டி போஸ் நகரைச்சேர்ந்த கருப்பசாமி என்பவரது மகன் மாணிக்கராஜா. பிரபல ரௌடியான இவர் மீது கோவில்பட்டி கிழக்கு,மேற்கு, கயத்தார், ஆலங்குளம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, கள்ளசாரயம் தயாரித்தல், வழிப்பறி, அடிதடி என 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் 2 முறை மாவட்ட ஆட்சியரால் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது. கடந்த 2 ஆண்டுகளாக மாணிக்கராஜா பால் வியாபாரம் செய்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில் இன்று மாணிக்கராஜா வீட்டில் விஷம் அருந்தி உயிருக்கு போராடிய நிலையில் இருந்தவரை அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

திருந்தி வாழ்ந்து வரும் தன்னை காவல்துறையினர் தொடர்ந்து மிரட்டி, துன்புறுத்தி வருவதாகம், காவல்துறையினர் மிரட்டலால் காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளார். மாணிக்கராஜாவிற்கு கிருஷ்ணவேணி என்ற மனைவியும், 2குழந்தைகளும் உள்ளனர். பிரபல ரௌடியான மாணிக்கராஜா விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மேற்கு காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Johnson's Engineers

crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory