» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் தனியார் நிறுவன ஊழியர் மர்மச்சாவு

புதன் 6, டிசம்பர் 2017 8:08:30 AM (IST)

தூத்துக்குடியில், பூட்டிய வீட்டிற்குள் தனியார் நிறுவன ஊழியர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார், உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி ஆசிரியர் காலனி 2–வது தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அருண்குமார்(38). திருமணமாகாத இவர், தனியார் ஏற்றுமதி–இறக்குமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். ஒரு மாதத்திற்கு முன்பு அவருடைய பெற்றோர்கள் தஞ்சாவூரில் உள்ள தங்களின் இளைய மகனுடன் வசிப்பதற்காக சென்று விட்டனர். இதனால் வீட்டில் அருண்குமார் மட்டும் தனியாக இருந்து வந்தார். மேலும் கடந்த சில வாரங்களாக அவர் வேலைக்கும் செல்லவில்லை.

இந்நிலையில், அவருடைய வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அந்த பகுதி பொதுமக்கள் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் வீட்டின் கதடை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு அவருடைய உடல் மற்றும் தலை தனித்தனியாக அழுகிய நிலையில் உருக்குலைந்து கிடந்தன. போலீசார் உடல் மற்றும் தலை பகுதியை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘அருண்குமார் கடந்த 20 நாட்களுக்கு முன்பே வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம். தூக்கு கயிற்றில் அதிக நாட்கள் அவருடைய உடல் தொங்கியதால் அழுகிய நிலையில் தலை, உடல் பகுதி ஆகியவை தனியாக விழுந்து இருக்கலாம் என தெரிகிறது. இருந்தபோதிலும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அதற்கான காரணம் என்ன? அல்லது அவருடைய சாவில் மர்மம் உள்ளதா? என்பது குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads

Joseph Marketing

crescentopticals



New Shape Tailors




Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory