» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

வியாழன் 30, நவம்பர் 2017 6:40:34 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் விடிய விடிய கனமழை பெய்து வருவதால், மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு வெங்கடேஷ் பிறப்பித்துள்ளார்.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைக் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று  தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் கன்னியாகுமரிக்கு தென்கிழக்கே சுமார் 500 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனத்த, மிகக் கனத்த மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய அறிவித்துள்ளது.

இதனால் தென் தமிழகத்தில், கடலோர மாவட்டங்களில் விடிய விடிய பலத்த மழை பெய்து வருகிறது. தூத்துக்குடியில் நேற்று பிற்பகலில் இருந்து மழை பெய்து வருகிறது. மாலையில் சற்று ஓய்ந்திருந்த மழை, இரவு முழுவதும் வெளுத்து வாங்கியது. விடிய விடிய மழை பெய்து வருவதால் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுபோல் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


Universal Tiles Bazar



Johnson's Engineers


selvam aqua

Nalam Pasumaiyagam


New Shape Tailors



Thoothukudi Business Directory