» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருடுபோன ரூ.22.83 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்பு : தூத்துக்குடி மாவட்ட எஸ்பி மகேந்திரன் பேட்டி

புதன் 29, நவம்பர் 2017 12:48:27 PM (IST)தூத்துக்குடி மாவட்டத்தில் திருடுபோன ரூ.22.83 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக எஸ்பி மகேந்திரன் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி மகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடியில் கடந்த செப்.8ம் தேதி, சிவன் கோயில் கும்பாபிஷேக விழாவின் போது நடந்த செயின்பறிப்பு தொடர்பாக மத்தியபாகம் காவல் நிலையத்தில 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக சென்னை நீலாங்கரையைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட 3பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 52 பவுன் நகையும், ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் சமீப காலத்தில் பதிவு செய்யப்பட்ட 61 வழக்குகளில் 74 பவுன் தங்க நகைகளும், 123 கிராம் வெள்ளியும் 18 இருசக்கர வாகனங்களும், 16 செல்போன்களும், 1 கார், ரூ.1 லட்சத்து 60ஆயிரம் மதிப்புள்ள எலக்ட்ரானிக் சாதனங்களும், என மொத்தம் 22 லட்சத்து 83ஆயிரத்து 610 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில், கந்துவட்டி தொடர்பாக அதிகளவில் புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. முழுமையான விசாரணையின் முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும். 

மாவட்டம் முழுவதும் 450க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம், முறப்பநாடு பஸ்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார். முன்னதாக, நகை பறிப்பு வழக்கில் திறமையாக செயல்பட்ட மத்திய பாகம் இன்ஸ்பெக்டர் வனசுந்தர், உதவி ஆய்வாளர் ஷ்யாம் சுந்தர், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் மரிய இருதயம், ராதா கிருஷ்ணன், தலைமைக் காவலர் பிச்சையா, முதல்நிலை காவலர் முத்துக்குமார் ஆகியோருக்கு எஸ்பி பாராட்டு தெரிவித்தார். 


மக்கள் கருத்து

RamuNov 29, 2017 - 11:42:39 PM | Posted IP 157.5*****

Thank you very much sir

காதர் பாட்சாNov 29, 2017 - 06:05:22 PM | Posted IP 171.4*****

காவல் ஆய்வாளர் திரு. வனசுந்தர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads


New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals


Joseph Marketing


Thoothukudi Business Directory