» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

துாத்துக்குடியில் கனி குரூப்ஸ் நிறுவனங்களில் ரெய்டு

செவ்வாய் 28, நவம்பர் 2017 5:16:43 PM (IST)




தூத்துக்குடியில் மருந்தகம், ஓட்டலில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தூத்துக்குடியில்  இயங்கி வரும் பிரபல கனி மெடிக்கல் மற்றும் கனி ரெசிடென்சி உள்ளிட்ட அவர்களுக்கு சொந்தமான பிற நிறுவனங்களிலும் மதுரையில் இருந்து மூன்றுக்கும் மேற்பட்ட கார்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சுமார் நான்கு மணி நேரத்திற்கு மேல் வருமானவரி சோதனை நடத்தி அங்கிருந்த முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றதாக தெரிகிறது.

அதுபோல் நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் பிரபலமான நிறுவமான பிரபாத் குருப்ஸ்க்கு சொந்தமான சாமில் மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தில் வருமானவரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.இந்நிறுவனத்திற்கு சொந்த மான ஷிப்பிங் நிறுவனம் துாத்துக்குடி பைபாஸ்ரோட்டில் உள்ளது. இரண்டு நிறுவனங்களின் ரெய்டுக்கும் தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது.இது குறித்து துாத்துக்குடி வருமானவரித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, எங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டனர்.


மக்கள் கருத்து

உண்மைNov 29, 2017 - 02:02:35 PM | Posted IP 122.1*****

வரிஏய்ப்பு செய்தவர்கள் அரசாங்கத்தை ஏமாற்றிய அனைவரும் தண்டிக்க படவேண்டும்! ஜெய் ஹிந்த்!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors



Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals








Thoothukudi Business Directory