» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி : டிசம்பர் 1ம் தேதி துவக்கம்

செவ்வாய் 28, நவம்பர் 2017 3:31:54 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நான்கு மையங்களில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் 01.12.2017 முதல் 09.02.2018 வரை நடைபெற உள்ளது.

இது தொடர்பாக ஆட்சியர் என்.வெங்கடேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிகளிலும் மற்றும் தூத்துக்குடியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள போட்டித் தேர்வுகள், வங்கித்தேர்வுகள், சீருடைப்பணியாளர் தேர்வுகள் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் ஆகிய பணிக்காலியிடங்களுக்கு ஏழை மாணவர்கள் பயன்பெறும் விதமாக இலவச பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தால் சிறப்புற நடத்தப்பட்டு வருகிறது. 

தற்பொழுது தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத் தொகுதி 4 பணியில் அடங்கிய 9351 காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு 11.02.2018 அன்று நடைபெற உள்ளது. டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்விற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 13.12.2017 ஆகும். கல்வித்தகுதி 10ஆம் வகுப்பு ஆகும். +2, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு மற்றும் அதற்கு மேல் கல்வித்தகுதி உடைய SC, SCA, ST, MBC, BC, BCM ஆகிய இனச்சுழற்சி உள்ளவர்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை. மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் காணலாம். 

விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் 01.12.2017 முதல் 09.02.2018 வரை ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர அனைத்து வேலைநாட்களிலும் மாலை 4.00 மணி முதல் 7.00 மணி வரை தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிகளிலும் மற்றும் தூத்துக்குடியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் (புதிய முகவரி : ஆசிரியர் காலனி 1ம் தெரு, பாண்டியன் கிராம வங்கி பின்புறம்) நடைபெற உள்ளது. எனவே, டி.என்.பி.எஸ்.சி., தொகுதி 4 தேர்விற்கு விண்ணப்பம் செய்திருந்து பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் employtut@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ, தபாலிலோ அல்லது நேரிலோ முன்பதிவு செய்து 01.12.2017 அன்று மையங்களில் நடைபெறும் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

M.Saravana SelvamDec 4, 2017 - 08:03:15 AM | Posted IP 157.5*****

Kovilpatti coaching class

M.Saravana selvamDec 4, 2017 - 08:02:12 AM | Posted IP 157.5*****

We want coaching class join

SundarisubburajDec 1, 2017 - 03:42:25 PM | Posted IP 157.5*****

Joinpannanum

sunaitha begamNov 30, 2017 - 01:38:56 PM | Posted IP 157.5*****

we want free coaching class join

A.GandhirajanNov 29, 2017 - 06:42:31 PM | Posted IP 125.1*****

TNPSC Coaching centre Kovilpatti

A.GandhirajNov 29, 2017 - 06:38:39 PM | Posted IP 125.1*****

we want free coaching class join.

MaharajaNov 29, 2017 - 07:19:34 AM | Posted IP 157.5*****

Kovilpatti

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsFriends Track CALL TAXI & CAB (P) LTD

Johnson's Engineers

New Shape Tailors


crescentopticals
Thoothukudi Business Directory