» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ப‌த்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்த‌ எல்.ஐ.சி அலுவலர் : தர்ணா செய்த‌ முன்னாள் கவுன்சிலர்

திங்கள் 20, நவம்பர் 2017 6:37:16 PM (IST)


ப‌த்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்த‌ எல்.ஐ.சி அலுவலரை கண்டித்து முன்னாள் கவுன்சிலர் தர்ணா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 4வது தெருவை சேர்ந்த மாடசாமி என்பவரது மகன் கனகராஜ். முன்னாள் 36வது வார்டு கவுன்சிலரான இவர் அப்பகுதியில் கேபிள் டிவி நடத்தி வருகிறார். அதன் மூலம் வரும் வருவாய் பணம் அவருக்கு 10 ரூபாய் நாணயங்களாக கேபிள் டிவி வீட்டு இணைப்புதாரர்கள் கொடுத்துள்ளனர். இந்நிலையில், கனகராஜ் எல்.ஐ.சி. பிரிமியம் கட்ட கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தில் உள்ள கிளை அலுவலகத்தில் 1075 ரூபாய் பிரிமியத்திற்கு 10 ரூபாய் நாணயங்களை வழங்கியுள்ளார். அதை ஏற்க காசாளர் மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் விரக்தியடைந்த கனகராஜ் எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு, ரிசர்வ் வங்கி வெளியிட்ட 10 ரூபாய் நாணயங்களை அரசு நிறுவனம் வாங்க மறுப்பதை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டார். மேலும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தலின் படி, 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் மீது போலீசில் புகார் தெரிவிக்கப் போவதாகவும் தெரிவித்தார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored AdsUniversal Tiles Bazar

selvam aqua

Nalam PasumaiyagamJohnson's Engineers


New Shape TailorsThoothukudi Business Directory