» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா... போக்குவரத்து மாற்றம்: தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவிப்பு

திங்கள் 20, நவம்பர் 2017 5:30:37 PM (IST)

தூத்துக்குடியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் வரும் கனரக மற்றும் இலகு ரக சரக்கு வாகனங்கள் தட்டப்பாறை விலக்கு வழியாக திருப்பிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட எஸ்பி மகேந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பு : தமிழக அரசின் சார்பாக, மாநில முழுவதும் தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில், தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவானது கோரம்பள்ளத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சிப் பள்ளி வளாகத்தில் 22.11.2017 அன்று நடத்தப்படுகிறது.

இதனை முன்னிட்டு,   தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். அரசின் நலத்திட்ட உதவிகள், பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது.இவ்விழாவில் கலந்து கொள்ள வருகின்ற பொதுமக்கள் மற்றும் பயனாளிகள் விழாப் பந்தலுக்குள் தண்ணீர் பாட்டில், உணவுப் பொருட்கள், பிளாஸ்டிக் கவர்கள், கைப்பை மற்றும் பெரிய அளவிலான பைகள் போன்ற எந்த பொருளும் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. அனைவருக்கும் தேவையான வசதி விழாப் பந்தலுக்குள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விழாவில் கலந்து கொள்ள வரும் வாகனங்களை காவல்துறையினரால் நிறுத்த ஒதுக்கப்பட்டுள்ள கீழ்க்காணும் இடங்களில் மட்டும் தான் நிறுத்த வேண்டும். இவ்விழாவிற்கு கலந்து கொள்ள வாகனங்களில் பாளையங்கோட்டை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை வழியாக வருபவர்கள், கோரம்பள்ளத்திலிருந்து இடது புறமாக செல்லும் அய்யனடைப்பு சாலை வழியாக சென்று, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடத்தில் தங்களது வாகனங்களை நிறுத்த வேண்டும்.

ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், நாசரேத், ஆழ்வார்திருநகரி மற்றும் உடன்குடி பகுதிகளிலிருந்து வருபவர்கள் செய்துங்கநல்லூர், வாகைக்குளம் அல்லது புதுக்கோட்டை வழியாக பாளையங்கோட்டை - தூத்துக்குடி நெடுஞ்சாலையில் வந்து சேர்ந்து, கோரம்பள்ளத்திலிருந்து இடது புறமாக செல்லும் அய்யனடைப்பு சாலை வழியாக சென்று, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடத்தில் தங்களது வாகனங்களை நிறுத்த வேண்டும். மதுரை-தூத்துக்குடி நெடுஞ்சாலை வழியாக வருபவர்கள் மடத்தூர் விலக்கிலிருந்து வலது புறமாக சோரீஸ்புரம் சாலையில் திரும்பி அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடத்தில் தங்களது வாகனங்களை நிறுத்த வேண்டும்.

தூத்துக்குடி மாநகர் மற்றும் திருச்செந்தூர் மார்க்கத்தில் வருபவர்கள் எப்.சி.ஐ ரவுண்டானா வழியாக மடத்தூர் விலக்கு சென்று இடதுபுறமாக சோரீஸ்புரம் சாலையில் திரும்பி அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடத்தில் தங்களது வாகனங்களை நிறுத்த வேண்டும். திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் வரும் கனரக மற்றும் இலகு ரக சரக்கு வாகனங்கள் தட்டப்பாறை விலக்கு வழியாக திருப்பப்பட்டு புதியம்புத்தூர், புதூர்பாண்டியாபுரம் விலக்கு வழியாக செல்ல வேண்டும்.

தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலிக்கு செல்லும் கனரக மற்றும் இலகு ரக சரக்கு வாகனங்கள் திருச்செந்தூர் ரோடு ரவுண்டானா வழியாக பொட்டல்காடு விலக்கு சென்று வலதுபுறமாக குலையன்கரிசல், கூட்டாம்புளி மற்றும் புதுக்கோட்டை வழியாக செல்ல வேண்டும். திருச்செந்தூரிலிருந்து துறைமுகத்திற்கு செல்லும் கனரக மற்றும் இலகு ரக சரக்கு வாகனங்கள் முத்தையாபுரம் பல்க் சந்திப்பிலிருந்து ஹார்பர் ரோடு வழியாக புதிய துறைமுகத்திற்கும், நகர்விலக்கு வழியாக பழைய துறைமுகத்திற்கும் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது..


மக்கள் கருத்து

JarvisNov 21, 2017 - 03:38:16 PM | Posted IP 182.7*****

மோட்டார் சைக்கிள் செல்ல ஏதேனும் தடை உண்டா ???

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads


New Shape Tailorscrescentopticals

Joseph Marketing


Friends Track CALL TAXI & CAB (P) LTD
Thoothukudi Business Directory