» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மணல் குவாரி அமைக்கும் முயற்சியை கண்டித்து பாஜ ஆர்ப்பாட்டம்: 97 பேர் கைது

செவ்வாய் 14, நவம்பர் 2017 10:36:05 PM (IST)



விளாத்திகுளம் அருகே  மணல் குவாரி அமைக்கும் முயற்சியை கண்டித்து தாலூகா அலுவலகத்தினை முற்றுகையிட்ட பா.ஜ.கவினர் 97 பேர் கைது செய்யப்பட்டனர். 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு முக்கிய ஆதரமாக இருப்பது வைப்பாறு, இந்த வைப்பாற்றின் கரையோரம் சித்தவநாயக்கன்பட்டி. மேட்டுப்பட்டி, வேலிடுப்பட்டி, சுப்பிரமணியபுரம், பனையடிப்பட்டி உள்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்கங்கள் உள்ளன. வைப்பாறு பகுதியில் இருந்துதான் பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் வழக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சித்தவநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள வைப்பாற்றில் இருந்து மணல் எடுத்து விற்பனை செய்வதற்காக சில நபர்கள் போலி ஆவணங்கள் தயாரித்து அரசின் உதவியுடன் குவாரி அமைதது மணல் எடுக்க முயற்சி செய்ததாக தகவல்கள் வெளியானது. 

அவ்வாறு அமைக்கப்பட்டு மணல் எடுத்து விற்பனை செய்தால் இப்பகுதியின் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும் என்றும், அந்த முயற்சியினை கைவிட வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சியினர் விளாத்திகுளம் தாலூகா அலுவலகத்தினை மாவட்ட தலைவர் பாலாஜி தலைமையில் முற்றுக்கையிட்டு நடைபெற்ற மணல் எடுக்கும் முயற்சியை கைவிட கோரி கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 25பெண்கள் உள்பட 97 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



crescentopticals



Friends Track CALL TAXI & CAB (P) LTD


Joseph Marketing


New Shape Tailors



Thoothukudi Business Directory