» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் சர்க்கரை பரிசோதனை முகாம் : எஸ்பி மகேந்திரன் தொடங்கி வைத்தார்.

செவ்வாய் 14, நவம்பர் 2017 4:09:54 PM (IST)



தூத்துக்குடியில் உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு எம்பவர் சார்பில்  நடைபெற்ற சர்க்கரை பரிசோதனை முகாமை எஸ்பி மகேந்திரன் தொடங்கி வைத்தார்.

உலக சர்க்கரை நோய் தினத்தையொட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் எம்பவர் சர்க்கரை நோய் கல்வி மற்றும் தடுப்புத் திட்டத்தின் சார்பில் சர்க்கரை நோய் விழிப்புணர்வு குறித்த கண்காட்சி மற்றும் இலவச சர்க்கரை நோய் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு எம்பவர் செயல் இயக்குநர் ஆ.சங்கர் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.மகேந்திரன் கண்காட்சியை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். 

சர்க்கரை நோய் மருத்துவ நிபுணர் டாக்டர். அருள் பிரகாஷ் கருத்துரை வழங்கினார். கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கந்தசாமி, ராஜாராம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.மகேந்திரன் இலவச சர்க்கரை பரிசோதனை முகாமை தொடங்கி வைத்து முதல் பரிசோதனையை மேற்கொண்டார். மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள், அமைச்சுப் பணியாளர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவு, எடை மற்றும் உயரம் (பி.எம்.ஐ.), இரத்த அழுத்தம் ஆகிய பரிசோதனைகள் செய்யப்பட்டது. 

மேலும் சர்க்கரை நோய் தடுப்பு மற்றும் சிகிச்சையைப் பற்றிய கல்வி, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சிகிச்சை முறை, உடற்பயிற்சி, சத்தான உணவுகள் உட்கொள்ளுதல்; பற்றிய ஆலோசனை ஆகியவையும் இந்த முகாமில் இலவசமாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக ஆய்வாளர் பெர்னாட் சேவியர், உதவி ஆய்வாளர் முத்து,  எம்பவர் மேலாளர் லலிதாம்பிகை மற்றும் பணியாளர்கள் தீபக், ஆனந்தி,  கோல்டா, தேவ மலர் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD

Johnson's Engineers







crescentopticals


New Shape Tailors



Thoothukudi Business Directory