» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பீச் அருகே காலாவதி சாக்லேட்டுகள் வீச்சு : போலீசார் விசாரணை

செவ்வாய் 14, நவம்பர் 2017 10:55:57 AM (IST)

தூத்துக்குடியில் பீச் அருகே காலாவதி சாக்லேட்டுகள், ஊறுகா, மிட்டாய்  பாக்கெட்டுகள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி, துறைமுகம் பீச் ரோட்டில், ரோச் பூங்காவிற்கு எதிர்புறம் உள்ள பகுதியில் காலாவதி சாக்லேட்டுகள், ஜாம் பாக்கெட்டுக்ள, ஊறுகா, சிப்ஸ், மிட்டாய் பாக்கெட்டுகள் வீசப்பட்டு, குவிந்து கிடந்தன. தகவலறிந்தது உணவுப்பொருள் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். சோதனையில் அவை அனைத்தும் காலாவதியானவை என தெரிந்தது. பின்னர் மாநகராட்சி ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு, அப்புறப்படுத்தப்பட்டது. 

இவற்றை யார் வீசியது என்பது தெரியவில்லை.தூத்துக்குடியில் உள்ள சில கடைகளில் காலாவதி உணவுப்பொருட்கள் விற்பனையான நடந்து வருவதாக புகார்கள் வந்தன. சோதனையில் சிக்கினால் அபராதம் விதிக்கப்படும் என்ற அச்சத்தில், அவற்றை குப்பையில் வீசிச் சென்றிருக்கலாம் எனத் தெரிகிறது. இது தொடர்பாக மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் தென்பாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


New Shape Tailors


Sterlite Industries (I) Ltd

Universal Tiles Bazar


Johnson's Engineers

CSC Computer Education


selvam aqua

Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory