» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண் தூக்கிட்டு தற்கொலை: கணவர் மீது பரபரப்பு புகார் - போலீசார் தீவிர விசாரணை

திங்கள் 13, நவம்பர் 2017 8:40:41 AM (IST)

தூத்துக்குடி அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். தனது சாவுக்கு கணவரும், உறவினர்களும் காரணம் என கடிதத்தில் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள புன்னகாயல் மரக்குடி தெருவை சேர்ந்தவர் சகாயம். இவருடைய மனைவி ஜியோனா (37). இவர்களுக்கு 11 வயதில் சாரா என்ற மகள் உள்ளார். கணவன்- மனைவி 2 பேரும், அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகின்றனர். இதில் அதிக கடன் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலையில் வீட்டில் ஜியோனா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவர்கள் ஜியோனா உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் எழுத்தி வைத்த கடிதம் கைப்பற்றப்பட்டது. இதில் தனது சாவிற்கு கணவரும், நெருங்கிய உறவினர்களும் காரணம் என்று எழுதி உள்ளாராம். இதுகுறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஐ.ஓ.பி வங்கியின் துறைமுக கிளை இடமாற்றம்

வியாழன் 20, செப்டம்பர் 2018 8:34:08 AM (IST)

Sponsored Ads

crescentopticals


New Shape Tailors



Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD





Thoothukudi Business Directory