» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குடிநீரை பரிசோதனை செய்து பயன்படுத்த வேண்டும் : ஆராய்ச்சியாளர் செ. சிங்கராஜா அறிவுறுத்தல்

சனி 11, நவம்பர் 2017 10:44:52 AM (IST)அன்றாடம் நம் வீடுகளில் பயன்படுத்தும் குடிநீரினையாவது  பரிசோதனை செய்து உபயோகப்படுத்த வேண்டும் என சமீபத்தில் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் இளம் விஞ்ஞானி விருது 2017க்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முனைவர்.செ.சிங்கராஜா கூறியுள்ளார். 

தூத்துக்குடி மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் நீர் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்து பல ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டுள்ள அவர் கூறியுள்ளதாவது : தூத்துக்குடி மாவட்டத்தில், கடலோர கிராமங்களில் உள்ள  தொழிற்சாலைகளால் அளவுக்கு அதிகமான நிலத்தடி நீர் உரிஞ்சப்படுவதால் அங்கு நிலத்தடி நீரின் உப்பு தன்மை அதிகரித்துள்ளதையும், தொழிற்சாலை கழிவுகளால் நிலத்தடி நீரும், தொழிற்சாலை புகையினால் நாம் சுவாசிக்கும் காற்றும் கூட அசுத்தம் அடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமல்லாது தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி போன்ற தாலுக்காவில் கடின பாறைகளில் உள்ள  புளூரைட்,  அப்படைட்டு, மைக்கா போன்ற கனிமங்களால் புளூரைடின் அளவானது உலக சுகாதார அமைப்பின் அளவான 1.5 மி.கி/லி. அளவை விட அதிகமாக காணப்படுவதையும்,  இதனால் பல் மஞ்சை,  முதுகெலும்பு வளைவு,  கால் வளைவு போன்ற நோய்களின் பாதிப்பு ஏற்படுவதாக கூறியுள்ளார்.

மேலும், தீப்பாறைகள் (Igneous Rocks) மற்றும் உருமாறிய பாறைகள் (Metamorphic Rocks)  சிதைவதினால் (Weathering) வெளிவரும் ரேடியம்  கதிரியக்க கூறுகள், ரேடான் கதிரியக்க வாயுக்களாக உருமாறி மண்ணிலும் காற்றிலும் கலந்து உலக சுகாதார அமைப்பின் அளவான 100 Bq/L என்ற அளவை நெருங்கி கொண்டிருப்பதால்  நுரையீரல் புற்றுநோய் போன்ற நோய்கள் வருவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிப்பதாக கூறுகிறார். அதுமட்டுமல்லாது அளவுக்கு அதிகமான செயற்கை உரங்களை பயன்படுத்துவதால் விளை நிலங்களின் தரம் குறைவதாகவும், இவற்றை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு விவசாயிகளை அறிவுறுத்துகிறார்!!

மேலும்அவர் கூறியதாவது, உலக சுகாதார அமைப்பானது நம் விவசாயத்திற்கு பயன் படுத்துகின்ற தண்ணீர், நம் வீட்டு உபயோகதிற்கு பயன்படுத்துகின்ற தண்ணீர் மற்றும் குடிநீரில் தனிமங்களின் தரத்தின் அளவினை நிர்ணையித்துள்ளது. ஆனால் இன்றைய நவீன உலகில் பல செயற்கையான இடற்பாடுகளால் நிலத்தடி நீரின் தனிமங்களின் அளவானது நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகரித்த வண்ணம் உள்ளது.. தனிமங்களின் அளவு நிர்ணயிக்கபட்ட அளவை விட அதிகமானாலும். குறைந்தாலும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

குறைந்தபட்சம் அன்றாடம் நம் வீடுகளில் பயன்படுத்தும் குடிநீரினையாவது  பரிசோதனை செய்து உபயோகப்படுத்த வேண்டும்!! "நீரின்றி அமையாது உலகு" என்ற வள்ளுவரின் கூற்றை ஏற்று நீரின் அவசியத்தை உணர்ந்து இயற்கை நமக்கு கொடுத்த வரத்தை பேணி பாதுகாக்க வேண்டும்!!மழை என்பது இயற்கையின் வரம்!! அவற்றை நாம் சரியான முறையில் கையாளும் திறனை மறந்ததால். இப்பொழுது மழையை கையாள தெரியாமல் அவற்றை கண்டு பயப்படும் பரிதாப  நிலை ஏற்பட்டுள்ளது!! தனிமனிதனிடத்தில் மாற்றம் என்பது ஏற்படுமாயின் அந்த மாற்றமானது  தன் குடும்பம்தன் சமுதாயம். தன் நாடு என்று எல்லோருக்கும் பயனை கொண்டு சேர்க்கும்!! இன்று எண்ணெய் கனிம வளங்களுக்காக போரிட்டு கொள்ளும் உலக நாடுகள், நாளை தண்ணீருக்காக போரிட்டு கொள்ளும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை என்று இந்த தண்ணீர் காதலன் முனைவர். செ. சிங்கராஜா குறிப்பிட்டுள்ளார்!! இவர் தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

S KANAGARAJANov 13, 2017 - 09:33:19 PM | Posted IP 157.5*****

Correct bro

நா.தனசங்கர்Nov 13, 2017 - 09:20:39 PM | Posted IP 101.2*****

அருமை ஐயா..

கணேஷ்Nov 13, 2017 - 12:55:57 PM | Posted IP 122.1*****

great

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTDcrescentopticals

New Shape Tailors
Joseph MarketingThoothukudi Business Directory