» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் குடிநீர் இணைப்பு பெற சிறப்பு முகாம் : மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

வியாழன் 9, நவம்பர் 2017 4:31:03 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியில் புதிய குடிநீர் இணைப்பு வழங்குவது தொடர்பாக சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. 

இது தொடர்பாக தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர்(ம)தனி அலுவலர் அல்பி ஜான் வர்க்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாநகராட்சியில் குடிநீர் இணைப்பு மேளா 25-9-2017 அன்று ஆரம்பிக்கப்பட்டது. தற்போது வரை 10965 குடிநீர் இணைப்பு விண்ணப்பங்கள் வரப்பெற்று  8976 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் பயன்பாட்டிற்காக ஒரே நாளில் குடிநீர்இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைந்த பகுதிகளான சங்கரப்பேரி, மீளவிட்டான், அத்திமரப்பட்டி, முத்தையாபுரம் மற்றும் தூத்துக்குடி ரூரல் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவது தொடர்பாக மேற்படி பகுதிவாழ் மக்கள் மாநகராட்சியில் குடிநீர் இணைப்பு கட்டணம் செலுத்துவதற்கு ஏதுவாக அந்தந்த பகுதிகளில் பொதுமக்கள் நலன்கருதி சிறப்பு முகாம்கள் மண்டல வாரியாக கீழ்காணும் அட்டவணையில் கண்டவாறு மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலே குறிப்பிட்பட்டுள்ள அட்டவணையில் கண்டுள்ளவாறு நடைபெறும் சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் குடிநீர் இணைப்பிற்கான தொகையினை செலுத்திய ஒரிரு தினங்களில குடிநீர் இணைப்பு வழங்கப்படவுள்ளது. எனவே பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர்(ம)தனி அலுவலர் தெரிவித்தார். மேலும் குடிநீர்குழாய்கள் பதிப்பதற்கு விடுபட்டுபோன பகுதிகள் கண்டறியப்பட்டு குழாய் பதிக்கும் பணியானது நடைபெற்று வருகிறது.


மக்கள் கருத்து

nanbanNov 11, 2017 - 11:45:25 AM | Posted IP 157.5*****

100 rs for new application. just come with property tax Receipt and persons available for filling form. Avoid middlemen.

nanbanNov 11, 2017 - 11:43:24 AM | Posted IP 157.5*****

p and t colony 9 th street east. address above wrongly mentioned.

உண்மைNov 10, 2017 - 05:25:57 PM | Posted IP 160.2*****

முதலில் இருக்கின்ற தண்ணீர் குழாய்களுக்கு சீரான குடிநீர் குடுங்க

arunNov 10, 2017 - 10:55:24 AM | Posted IP 106.2*****

kaasu கொடுத்தவனுக்கு முதலில் தண்ணிய கொடுங்க .....மாநகராட்சிக்கு panam thattupaatu pola ,athan மக்களிடம் கேக்குறாங்க ..கொடுமை

ரவிNov 9, 2017 - 11:32:41 PM | Posted IP 157.5*****

மாப்பிள்ளையூரனி பகுதிக்கு எப்ப குடுப்பிங்க

மக்கள் kuralNov 9, 2017 - 08:20:15 PM | Posted IP 59.90*****

அது சரிங்க புதுசா பணம் கட்டுனா ஒரே நாளுல இணைப்பு குடுக்குற திட்டம்ல சரிதா 2 ,3 வருசத்துக்கு முன்னாடி பணம் கட்டி காத்துக்கிடக்குறவுங்களுக்கு என்ன பிளான் வச்சிருக்கீங்கோ???????????...........................????

குலாம், ஹவுசிங்போர்டு 3 வது வார்டுNov 9, 2017 - 07:09:29 PM | Posted IP 182.7*****

ஏற்கனவே வசூலித்த தொகைக்கு இன்னும் குழாய் பதிக்க முடியவில்லை, மக்கள் வசிக்கும் ஹவுசிங்போர்டு பகுதிக்கு இன்னும் மெயின் குழாய் பதிக்க முடியவில்லை,கேட்டால் அரசால் ஒதுக்கிடு செய்த ஹவுசிங்போர்டு பகுதி வரைபடம் (மேப்) மாநகராட்சியில் இல்லை, ஆனால் மக்கள் இல்லாத தனியார் நிலபகுதி வரைபடம் மட்டும் இவர்களிடம் இருக்கும், மக்களே இல்லாத தனியார் பிளாட் உள்ள பகுதிக்கு மெயின் குழாய் பதிக்கபட்டுவிட்டது, யாரை ஏமாற்றுகிறதோ இந்த நிர்வாகம்.

kumarNov 9, 2017 - 04:59:53 PM | Posted IP 182.7*****

புதிய இணைப்பு கட்டணம் விவரம் தெரிவிக்கவில்லை ?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsJoseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD


New Shape TailorscrescentopticalsThoothukudi Business Directory