» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் நவ.18-ல் வேலைவாய்ப்பு முகாம் : ஆட்சியர் தகவல்

புதன் 8, நவம்பர் 2017 12:29:36 PM (IST)

தூத்துக்குடி சி.வ.அரசு மேல்நிலைப் பள்ளியில் வருகிற 18ம் தேதி தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக ஆட்சியர் என். வெங்கடேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சிறப்பம்சமாக மாவட்ட அளவிலான மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக, தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைவாய்ப்புக்காக பதிவு செய்தவர்கள் / பதிவு செய்யாதவர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு சிறப்பு நடவடிக்கையாக தனியார் துறை வேலைவாய்ப்பு சிறப்பு முகாம் சி.வ.அரசு மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடியில் 18.11.2017 அன்று (சனிக்கிழமை) காலை 09.00 மணிக்கு நடைபெற உள்ளது. 

இதில் முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளனர். விருப்பமுள்ள பதிவுதாரர்கள் முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும் இந்த சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் பங்கு பெறும் வேலைநாடுநர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் தாமாகவே அரசு அங்கீகாரம் பெற்ற ncs.gov.in என்ற இணையதளத்தில்10.11.2017க்குள் பதிவு செய்ய வேண்டும் அல்லது அலுவலகத்தில் நேரில் வந்து பதிவு செய்ய வேண்டும். மேலும், ஏற்கனவே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஜனவரி 2011 முதல் டிசம்பர் 2015 முடியவுள்ள புதுப்பித்தல் காலக்கெடுவிற்குள் (21.11.2017க்குள்) புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்களுக்கு அரசு அறிவித்துள்ள சிறப்பு சலுகை அடிப்படையில் புதுப்பித்தல் செய்து தரப்படும். முகாமில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைக்கான விண்ணப்பம் வழங்கும் முகாமும் நடைபெற இருக்கிறது. 

எனவே, மாற்றுத்திறனாளிகள் மற்றும் இதுவரை இத்திட்டத்தில் பயன்பெறாதவர்கள் ஆகியோர் அசல் வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வங்கிக்கணக்கு ஆரம்பித்து வங்கிக்கணக்குப்புத்தகம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் இம்முகாமில் கலந்து கொள்ளலாம். வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வேண்டி விண்ணப்பிக்கும் பதிவுதாரர்களுக்கு, தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்புக்கான நேர்காணலுக்கும் பரிந்துரை செய்யப்படும் என்பதால், தகுதியுடைய பதிவுதாரர்கள் தயக்கமின்றி வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பித்து பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஆகியவை வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான திறன் பயிற்சி அளித்தல் மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு தொடர்பிலான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. எனவே, விருப்பமுள்ள பதிவுதாரர்கள் திறன் பயிற்சியில் கலந்து கொண்டு பயனடையலாம் என்றும் 18.11.2017 தேதியில் ஏறத்தாழ 60 தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. அதனால் இந்த மாபெரும் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் எழுதப்படிக்கத் தெரிந்தவர் முதல் முதுநிலை பட்டதாரி B.E., Diploma, ITI படித்தவர்கள் உள்ளிட்ட அனைவரும் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். தனியார் நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டால் அவர்களின் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டாது என்றும் மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

sakthivel.kNov 10, 2017 - 08:12:47 PM | Posted IP 106.6*****

Diploma in civil engineering I have interested to site engineer

sakthivel.kNov 10, 2017 - 08:12:45 PM | Posted IP 106.6*****

Diploma in civil engineering I have interested to site engineer

sakthivel.kNov 10, 2017 - 08:12:45 PM | Posted IP 106.6*****

Diploma in civil engineering I have interested to site engineer

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Johnson's Engineers
crescentopticals

New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD
Thoothukudi Business Directory