» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசு கேபிள் டிவியில் கட்டண சேனல்கள் துண்டிப்பு: ஆட்சியரிடம் ஆபரேட்டர்கள் புகார்

திங்கள் 6, நவம்பர் 2017 3:26:50 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு கேபிள் டிவியில் கட்டண சேனல்கள் நீக்கப்பட்டுள்ளதாக ஆட்சியரிடம் ஆபரேட்டர்கள் புகார் தெரிவித்தனர். 

அரசு கேபிள் டிவியில் கட்டண சேனல்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி நீக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, தமிழக கேபிள்டிவி ஆபரேட்டர்கள் பொது நலசங்கம் சார்பில் மாவட்ட தலைவர் எம்ஆர்.பிரபு தலைமையில், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இருந்து வந்திருந்த கேபிள் டிவி ஆபரேட்டர்கள் திரளானோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து முற்றுகையிட்டனர். 

பின்னர் அவர்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில், அந்த மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தில், அரசு கேபிள் டிவி கட்டுப்பாட்டு அறை மூலம் வழங்கப்பட்டு வந்த கட்டண சேனல்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கேபிள்டிவி சந்தாதார்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஆபரேட்டர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக அரசு கேபிள் டிவியில் கட்டண சேனல்களை ஒளிபரப்ப நடவடிக்கை எடுகக் வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

crescentopticals

New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD


Johnson's Engineers










Thoothukudi Business Directory