» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பேருந்து நிலையத்தில் வாகனங்களை நிறுத்தினால் பறிமுதல் : தூத்துக்குடி மாநகராட்சி எச்சரிக்கை

வெள்ளி 3, நவம்பர் 2017 4:26:24 PM (IST)தூத்துக்குடி புதிய பேருந்து  நிலையத்தில் வாகனங்களை நிறுத்தினால் பறிமுதல் செய்யப்படும்  மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி  மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் பொது மக்கள் தங்களது வாகனங்களை பொதுமக்களும், பயணிகளும்  நடந்து செல்லும் இடத்திலும், பேருந்து நிறுத்துமிடத்திலும் தங்களது இரு சக்கர வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனர். 

இவ்வாறு நிறுத்துவதன் மூலம் பேருந்துகள் வந்து செல்லவும், பொது மக்களுக்கும் பயணிகளுக்கும் மிகவும் சிரமமாக உள்ளது. இதனை தவிர்க்கும் வகையில் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நிறுத்தும் இரு சக்கர வாகனங்களில் எச்சரிக்கை அறிவிப்பு ஒட்டப்பட்டு வருகிறது. இனிவரும் காலங்களில் இவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்கள் பொது மக்கள் மற்றும் பயணிகளின் நலன் கருதி மாநகராட்சியால் பறிமுதல் செய்யப்படும்  என தெரிவிக்கப்படுகிறது.


மக்கள் கருத்து

ராமன்Nov 4, 2017 - 01:25:04 PM | Posted IP 180.9*****

பாலகிருஷ்ணா டாக்கிஸிசில், படம் பார்க்க செல்பவர்கள் ரோட்டில் டூ வீலர் நிறுத்தி செல்கிறார்கள். பொது மக்களுக்கு மிகுந்த இடைஞ்சலாக உள்ளது. இதற்கு மாநகராட்சி நிர்வாகம் கட்டணம் வசூலிக்கலாம்

திருமந்திர நகர் மூர்த்திNov 4, 2017 - 10:32:41 AM | Posted IP 42.11*****

சாலை மேம்பாடு, சுத்தமான குடிநீர் ,சுகாதாரமாக கழிவு அகற்றபட்ட வாய்கால்கள் போன்ற அடிப்படை நிறைவேற்றி விட்டு வீட்டுவரி குடிநீர் வரி உயர்வு வாகன நிறுத்த வரி போன்ற வற்றை கொண்டு வரலாமே மாநகராட்சி பணி செய்ய ஆள் பற்றாக்குறை இதுபோன்ற வசூல் பணிக்கு பணியாளர் எங்கிருந்து வருகின்றனர் குடிநீர் தூர்த்து குடித்த நிலை மாற்றி ஆங்காங்கு குடிநீர் குழாய் உடைப்பு ஏர்பட்டு புதிய நீரோடை களை உருவாக்கி மக்களை ஹாப்பி ஸ்ட்ரீட் கொண்டாட வைத்த மாநகராட்சிக்கு நமது நன்றியை தெரிவிக்கக கடமைபட்டுள்ளோம்

mannanNov 3, 2017 - 08:08:43 PM | Posted IP 122.1*****

குட்

M.RamanathaboopathiNov 3, 2017 - 05:22:50 PM | Posted IP 103.3*****

முதலில் பேருந்து நிலையத்தில் நடைபாதையை சரி செய்யுங்கள் அவ்வளவு ஆக்கிரமிப்பு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

crescentopticals

Joseph Marketing

New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD
Thoothukudi Business Directory