» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

வியாழன் 14, செப்டம்பர் 2017 11:23:16 AM (IST)

நீட் தேர்வுக்கு எதிராக தூத்துக்குடியில் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் நீட் தேர்வை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி வாகைகுளம் அன்னை தெரசா பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியர்கள் சுமார் 300பேர் கல்லூரி அருகே இன்று காலை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த டிஎஸ்பி சீமைச்சாமி மற்றும் புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. . 


மக்கள் கருத்து

உண்மைSep 14, 2017 - 04:20:26 PM | Posted IP 122.1*****

பொறியியல் துறைக்கு அடுத்த வருடம் முதல் தானே நீட் தேர்வு! ஓ அட்வான்சா ட்ரைனிங் எடுக்கிறாங்க போல!

தமிழன்Sep 14, 2017 - 01:31:35 PM | Posted IP 180.2*****

போராட்டமே செய்யாத கல்லூரியில் போராட்டம் .... கல்லூரி நிர்வாத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் நடக்க இது சாத்தியமா?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Adscrescentopticals


Friends Track CALL TAXI & CAB (P) LTD
Thoothukudi Business Directory