» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பள்ளி வளாகத்தில் வேன் டிரைவருக்கு அரிவாள் வெட்டு

வியாழன் 14, செப்டம்பர் 2017 9:02:33 AM (IST)

கோவில்பட்டி அருகே பள்ளி வளாகத்தில் வேன் டிரைவரை அரிவாளால் வெட்டிய மாணவியின் தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியையடுத்த சுந்தரேஸ்வரபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த தனசேகரன் மகன் விக்னேஷ்(19). இவர் குருமலையில் உள்ள மெட்ரிக் பள்ளியின் வேன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மாலை பள்ளி வளாகத்தில் நின்று கொண்டிருந்தபோது,  அங்கு வந்த பள்ளி மாணவியின் தந்தை,  விக்னேஷை அழைத்தாராம். 

அருகில் சென்ற விக்னேஷை அவர் அரிவாளால் வெட்டினாராம். இதில் பலத்த காயமடைந்த அவர், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவ இடத்தை டி.எஸ்.பி. முருகவேல் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதுகுறித்து கொப்பம்பட்டி போலீசார் வழக்குப் பதிந்து,  கட்டடத் தொழிலாளியை தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads
New Shape Tailorsselvam aquaJohnson's Engineers

Universal Tiles Bazar

Thoothukudi Business Directory