» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வேன் மீது லாரி மோதி விபத்து: 7 பேர் படுகாயம்

வியாழன் 14, செப்டம்பர் 2017 8:54:56 AM (IST)

கோவில்பட்டி அருகே பழுதாகி நின்று கொண்டிருந்த வேன் மீது லாரி மோதியதில் வேனில் இருந்த 7 பேர் காயமடைந்தனர்.

ராஜபாளையம் லாப விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த கடற்கரை மகன் சங்கரமணி (46). இவர் மற்றும் இவரது உறவினர்கள் சுமார் 20 பேர் ராஜபாளையத்திலிருந்து புளியம்பட்டியில் உள்ள கோயிலுக்கு வேனில் செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்டனர். ராஜபாளையம் அய்யனார்புரத்தைச் சேர்ந்த முத்து மகன் ராமகிருஷ்ணன்(27) ஓட்டி வந்த வேன், இளையரசனேந்தல் சாலையில் அய்யனேரி அருகே சென்றுகொண்டிருந்தபோது, டயர் வெடித்து பழுதானதாம்.

இதையடுத்து, சாலையோரத்தில் நிறுத்தி சரி செய்த பின்னர், வேன் புறப்படத் தயாரான நிலையில், ராஜபாளையத்திலிருந்து தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த லாரி, வேனின் பின்பகுதியில் மோதியதில் வேன் சாலையோர பள்ளத்தில் விழுந்தது. இதையடுத்து, வேனில் இருந்த சங்கரமணி(46), கோமதியம்மாள்(70), சிவகாமி(75), வைஷ்ணவி (8), மணிகண்ட அய்யனார்(19), ரூத் (25), வேன் கிளீனர் சண்முகராஜ்(26) ஆகிய 7 பேர் காயமடைந்தனர். அவர்கள் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, லாரி டிரைவர் ஓட்டப்பிடாரத்தைச் சேர்ந்த சி.சுந்தரவடிவேலிடம் (43) விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Adsselvam aqua


Universal Tiles Bazar

New Shape TailorsJohnson's EngineersThoothukudi Business Directory