» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 3வது யூனிட் பழுது

வியாழன் 14, செப்டம்பர் 2017 8:49:31 AM (IST)

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் உள்ள 3வது யூனிட்டில் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருவதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 5 யூனிட்டுகள் (யூனிட்) மூலம் தினமும் 1050 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், அவ்வப்போது மின் உற்பத்தி யூனிட்டுகளில் ஏற்படும் பழுது காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்படும் நிலை இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 6-ம் தேதி 3வது யூனிட்டில் உள்ள கொதிகலனில் பழுது ஏற்பட்ட நிலையில், 11-ம் தேதி பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. 

இதற்கிடையே, நேற்று காலையில் மீண்டும் 3வது யூனிட்டில் மின் மாற்றத்தில் பழுது ஏற்பட்டது. இதன்காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. பழுதை சரிசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே, மின்தேவையைக் கருத்தில் கொண்டு அனல் மின்நிலையத்தில் 1வது மற்றும் 2வது யூனிட்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், தற்போது யூனிட்டு நேற்று இரவு நிலவரப்படி 400 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals
Thoothukudi Business Directory