» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாலிபரை வெட்டிக்கொன்றவருக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

வியாழன் 14, செப்டம்பர் 2017 8:28:54 AM (IST)

தூத்துக்குடியில் வாலிபரை வெட்டிக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது..

தூத்துக்குடி அண்ணாநகர் 7-வது தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் முத்துக்குமார் என்ற மதுரை முத்து (24). அதே பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் சதீஷ்குமார் (22). இவர்கள் 2 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் முத்துக்குமார் தூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு பன்றி பண்ணையில் வேலைக்கு சேர்ந்தார். சிறிது நாட்கள் கழித்து அதே பண்ணையில் சதீஷ்குமாரும் வேலைக்கு சேர்ந்தார்.

சதீஷ்குமார் வேலைக்கு சேர்ந்த பிறகு பண்ணையில் இருந்து அடிக்கடி பன்றிகள் காணாமல் போனது. இதற்கு சதீஷ்குமார்தான் காரணம் என்று முத்துக்குமார் கூறி வந்தார். கடந்த 23-7-14 அன்று இரவு சதீஷ்குமாரை, பன்றி பண்ணைக்கு முத்துக்குமார் அழைத்து வந்தார். அங்கு வைத்து முத்துக்குமார் அவருடைய நண்பர்கள் அருணாசலம், இசக்கிராஜா, மதன், விக்கி, ஆத்தி, பொன்செல்வன் என்ற செல்வம் ஆகியோர் சேர்ந்து சதீஷ்குமாரை அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி விட்டனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கவுதமன் குற்றம் சாட்டப்பட்ட முத்துக்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். மற்ற 6 பேரும் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செல்வக்குமார் ஆஜர் ஆனார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Adsselvam aqua


Johnson's Engineers

New Shape Tailors

Universal Tiles Bazar

Thoothukudi Business Directory