» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்: 385 பேர் கைது

வியாழன் 14, செப்டம்பர் 2017 8:26:29 AM (IST)

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 385 பேர் கைது செய்யப்பட்டனர்..

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடந்து வருகிறது. அதன்படி நேற்று 7-வது நாளாக வேலைநிறுத்தம் நீடித்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் பணிகள் அனைத்தும் முடங்கி உள்ளன.

இதைத் தொடர்ந்து நேற்று முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். போராட்டத்துக்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் பவுல் ஆபிரகாம், தமிழ்நாடு தனியார் கல்லூரி அலுவலர் சங்க பொதுச் செயலாளர் சுப்பிரமணியன், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் மாவட்ட தலைவர் பிரான்சிஸ் ஹென்றி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் ரசல் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

இதில் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் ஜெயபால், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ஜெகநாதன், சத்துணவு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் தமிழரசன், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் மகேந்திரபிரபு, மூட்டா சிவஞானம், பூமாரி, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பூசைத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர். நேற்று மாலையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தூத்துக்குடி புறநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு சீமைச்சாமி தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இதில் 135 பெண்கள் உள்பட 385 பேரை போலீசார் கைது செய்து மடத்தூரில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored AdsNew Shape Tailors

selvam aqua

CSC Computer Education


Nalam Pasumaiyagam

Sterlite Industries (I) Ltd


Universal Tiles Bazar

Johnson's EngineersThoothukudi Business Directory