» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

போராட்டத்தின் போது மயங்கி விழுந்த மூதாட்டி : திருச்செந்துாரில் பரபரப்பு

புதன் 13, செப்டம்பர் 2017 8:13:02 PM (IST)
குலசேகரன்பட்டணம் பகுதி கிராம மக்கள் நடைபாதை கேட்டு திருச்செந்தூர் ஆர்.டி.ஒ., அலுவலகத்தை முற்றுகையிட்டு முறையிட முயன்றனர். அவர் களை போலீசார் தடுத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே முற்றுகை போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த மூதாட்டி மயங்கி விழுந்தார்.

துாத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டணம் கீழமறக்குடி தெருவின் ஒரு பகுதியில் 7 குடும்பத்தினர் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அப்பகுதியில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு அதில் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இப்பகுதியில் வசிப்பவர்கள் போலீஸ் குடியிருப்பு பின்பகுதியை நடைபாதையாக பயன்படுத்தி வந்தனர். இவர்களுக்கு தனி நடைபாதை கேட்டு நீண்ட நாட்களாக அதிகாரிகளிடம் வலியுறுத்தி வந்தனர். 

ஆனால் இப்பிரச்சினையில் இதுவரை நாள் தீர்வு ஏற்படவில்லை. தற்போது போலீஸ் குடியிருப்பை சுற்றியுள்ள பகுதியில் காம்பவுண்ட் சுவர் அமைக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இதனால் இதுநாள் வரை கீழக்மறக்குடியை தெருவைச் சேர்ந்த 7 குடும்பத்தினர்களுக்கு நடைபாதை இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் திருச்செந்தூர் ஆர்.டி.ஒ., அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். அப்பகுதி மக்கள் முற்றுகையிட வருவதை அறிந்ததும் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். முற்றுகையிட்டு அதிகாரி களிடம் முறையிட வந்த 60க்கும் அதிகமான ஆண்கள், பெண்களை போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை. 

இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதற்கிடையே ஆர்.டி.ஒ., அலுவலகத்தில் அதிகாரி இல்லாததால், உள்ளே அனுமதிக்க முடியாத என போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்ட குறிப்பிட்ட சிலர் மட்டும் தங்களது கோரிக்கை களை திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் அழகரிடம் நேரில் சென்று வழங்கினர்.

இதற்கிடையே ஆர்.டி.ஒ., அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்ட மூதாட்டி ஒருவர் கடும் வெயிலால் பாதிக்கப்பட்டு அப்பகுதியில் மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவருடன் வந்தவர்கள் மூதாட்டியை ஆசுவாசப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நீடித்தது. 
இப்பிரச்சனையில் தாலுகா அலுவலகத்தில் தங்களது பிரச்சனை குறித்து மனு அளிக்கப்பட்டதால் முற்றுகைபோராட்டம் நடத்தியவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

crescentopticalsFriends Track CALL TAXI & CAB (P) LTD

Thoothukudi Business Directory