» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஏற்றுமதி, இறக்குமதி தாெடர்பான 3 நாட்கள் பயிற்சி: தூத்துக்குடியில் நாளை துவக்கம்

புதன் 13, செப்டம்பர் 2017 5:46:39 PM (IST)

தூத்துக்குடியில் ஏற்றுமதி, இறக்குமதி வழிமுறைகளும், சட்ட திட்டங்களும் தொடர்பான தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் 3 நாட்கள் பயிற்சி நாளை துவங்குகிறது. 

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி நிறுவனம, (சென்னை) ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகள், ஏற்றுமதி சட்டதிட்டங்கள் பற்றிய 3 நாள் பயிற்சியினை வரும் செப்டம்பர் மாதம் 14-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை தூத்துக்குடியில் உள்ள தூத்துக்குடி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் சங்கத்துடன் (துடிசியா), (4/158, ராம் நகர், எட்டயபுரம் ரோடு, தூத்துக்குடி 628 002-ல்) இணைந்து நடத்தப்படவுள்ளது.

உலகமயமாக்கலின் விளைவாக, ஏற்றுமதி வர்த்தகத்திற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இப்பயிற்சியில் ஏற்றுமதி சந்தையின் தேவை, கொள்முதலுக்கான வாய்ப்புகள், பொருளை பதப்படுத்துதல், சீரிய முறையில் பாக்கிங் செய்தல், ஏற்றுமதி-இறக்குமதி சம்பந்தப்பட்ட சட்டதிட்டங்கள், வங்கி நடைமுறைகள், அந்நிய செலாவணியின் மாற்றுவிகிதங்கள், காப்பீடு குறித்த தகவல்கள், ஏற்றுமதி-இறக்குமதி விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள், இறக்குமதிக்கான சுங்க வரி கணக்கிடல் போன்றவை பயிற்றுவிக்கப்படும். 

மேலும், இப்பயிற்சியில் ஏற்றுமதியாளர்களுக்கான ஊக்க உதவிகள் பற்றியும் அவைகள் பெறும் முறைகள் பற்றியும் ஆலோசனைகளும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் குறித்து விளக்கப்படும். ஏற்றுமதி-இறக்குமதி சார்ந்த தொழில் துவங்க விரும்பும் அல்லது தற்போது உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்ய எண்ணும் 18 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் சேரலாம். இப்பயிற்சிக்கான கட்டணம் ரூபாய் 3500/- ஆகும். இப்பயிற்சியில் சேர விரும்புவோர் பதிவு செய்யவும், கூடுதல் விவரங்கள் அறியவும் துடிசியா தொலைபேசி எண். : 0461 – 2347005, கைபேசி எண்: 9840158943, மின்னஞ்சல் முகவரி [email protected] ஆகியவற்றை தொடர்பு கொள்ளவும். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticalsThoothukudi Business Directory