» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டி பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை

புதன் 13, செப்டம்பர் 2017 5:15:30 PM (IST)கோவில்பட்டி பகுதியில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. 

கோவில்பட்டி பகுதியில் கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை முதல் லேசான தூறல் மழை பெய்து வந்தது. சுமார் 3 மணிநேரம் மிதமான மழை பெய்தது. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் மாலையில் திடீரென பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. சுமார் 1மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது.தொடர்ந்து சாரலாக பெய்தது. 

கோவில்பட்டி மட்டுமின்றி எட்டயபுரம், கழுகுமலை, கயத்தார், கடம்பூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பரவலாக பெய்து வருகிறது. காலையில் இருந்தே மழை பெய்து வருவதால் கோவில்பட்டி நகரில் புதுரோடு, மாதங்கோவில் ரோடு மற்றும் மார்க்கெட் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளப்பெருக்கடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்றனர். மேலும் கோவில்பட்டி, கழுகுமலை பகுதிகளில் பல இடங்களில் மழையின் காரணமாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory