» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

துாத்துக்குடியை நகராட்சியாக மாற்ற வேண்டும் : செயல்பாடற்ற நிர்வாகத்திற்கு டிஒய்எப்ஐ கடும் கண்டனம்

புதன் 13, செப்டம்பர் 2017 11:18:27 AM (IST)துாத்துக்குடியில் நேற்றிரவும்,இன்று காலையும் பெய்த மழைக்கே சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.எனவே பாெதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை சரிவர செய்து தராததால் துாத்துக்குடியை மீண்டும் நகராட்சியாக்க வேண்டும் என டிஒய்எப்ஐ கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் பிற மாவட்டங்களில் மழை பெய்த நிலையில் துாத்துக்குடிக்கு மட்டும் வருண பகவான் கருணை காட்டாமலிருந்தார். அருகே உள்ள திருநெல்வேலியில் மழை பெய்த நிலையில் நம் நகரில் வெயிலால் பொதுமக்கள் வாடி வதங்கி வந்தனர். மேலும் அவ்வப்போது மழை பெய்வது போல் மேகங்கள் கூடி கடைசியில் மழை பெய்யாமல் ஏமாற்றியது.சில நேரங்களில் துாறல் விழுந்த நிலையில் நேற்று நள்ளிரவு துாத்துக்குடியில் சிறிய துாறலாகவும் பிறகு நன்றாக மழை பெய்தது.மேலும் இன்று காலை (13 ம் தேதி) சுமார் 7 மணியளவில் மழை பெய்ய ஆரம்பித்தது.தொடர்ந்து தீவிரமாக பயங்கர இடி,மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. பிறகு தன் தீவிரத்தை குறைத்து மெதுவாக மழை விழுந்தது. இந்நிலையில் நேற்றும் இன்றும் பெய்த மழையால் துாத்துக்குடி சாலைகளில் மழை நீரால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் எந்த அடிப்படை வசதியும் இல்லாத துாத்துக்குடியை நகராட்சியாக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (டிஒய்எப்ஐ) கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் மாவட்ட செயலாளர் முத்து கூறும்போது, துாத்துக்குடியில் பாதாள சாக்கடை, சாலைவசதி, குடிநீர் வசதி என எதுவுமே சரிவர செய்யவில்லை. ஏனோதானோவென இருக்கிறது. நமது நகரில் நேற்றிரவு மற்றும் இன்று காலை பெய்த மழைக்கே சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.இதனால் பொதுமக்கள் சாலையில் தேங்கியிருக்கும் தண்ணீரில் நின்று பேருந்து ஏறவேண்டியுள்ளது. மழை நீர் செல்ல வசதியாக துாத்துக்குடி விவிடி ரோடு முதல், பக்கிள் ஓடை வரை புதிய கால்வாய் ஒன்று பலகோடி மதிப்பில் போடப்பட்டது. ஆனால் கால்வாயை தரைமட்டத்திலிருந்து சுமார் மூன்றரை அடி உயரத்திற்கு மேல் அமைத்துள்ளதால் மழைநீர் செலல வழியின்றி சாலை முழுதும் தேங்கி விடுகிறது. எனவே பாலத்தின் உயரத்தை தரை மட்டத்திற்கு மாற்ற வேண்டும். மேலும் பாளை. ரோடு, காய்கறி மார்க்கெட், சங்கராபுரம் பகுதியில் பெண்கள் பள்ளி செல்லும் வழி முழுதும் தண்ணீர் தேங்கியுள்ளது. இவை எல்லாம் மாநகராட்சி அலுவலகத்திற்கு அருகிலுள்ள பகுதிகள். அங்கேயே இந்த நிலைமை எனில், பிற பகுதிகளில் நிலைமையை யோசித்துக் கொள்ளலாம்.வருடம் தோறும் துாத்துக்குடியில் மழை பெய்யும் போது மாநகராட்சி சார்பில் லாரிகளை கொண்டு, மோட்டார் மூலம் உறிஞ்சி தண்ணீர் எடுக்கிறார்கள். ஆனால் நிரந்தர தீர்வுக்கான வழிமுறைகளை யோசித்து செயல்படுத்தவில்லை. எனவே பொதுமக்களுக்கு எந்தவித அடிப்படை வசதியும் செய்யாத துாத்துக்குடி மாநகராட்சியை மீண்டும் நகராட்சியாக மாற்ற வேண்டும் என்ற அவர். மாநகராட்சி சார்பில் தற்போது ஹேப்பி ஸ்ட்ரீட் எனும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதை கண்டித்து டிஒய்எப்ஐ சார்பில் விரைவில் "மழைநீரில் குளித்து விளையாடு" எனும் திட்டத்தினை செயல்படுத்த போகிறோம் என்றார்.


மக்கள் கருத்து

ராஜாSep 14, 2017 - 09:55:12 PM | Posted IP 27.62*****

ஆறு ஆண்டுகளாக அதிமுக அரசுதானே தமிழக அரசை ஆண்டது. இதில் மந்திரி வேற. இதுல அடுத்தவரை குறை சொல்லாதீர்கள். நீங்கள் எண்ண எண்ண செய்தீர்கள் என்று சொல்லுங்கள். அதிமுக வினர்கு.

RajaSep 13, 2017 - 07:34:56 PM | Posted IP 61.2.*****

ஐந்து வருசம் மந்திரியாக இருந்த செல்லபாண்டிய தூக்கு போட்டு சாவ சொல்லு

Sathish moraisSep 13, 2017 - 04:27:25 PM | Posted IP 49.35*****

There is no proper road due to making of drainage system... drainage system also not completed also roads properly...dmk implemented our city due to sedhu cannel... but that to failed because of ramar bridge... only d profit is for land brokers... land rate only hiked nothing else had improved... gov is putting more & more rules, that is causing problems & strugles are affecting only lower class & middle class people not d rich or average people...

SelvarajSep 13, 2017 - 04:21:14 PM | Posted IP 27.62*****

Thanks tutyonline. Nice photo graphy.... Corporation commitioner action????????

chellapaandiayanSep 13, 2017 - 03:07:51 PM | Posted IP 59.89*****

இதை மாநகராட்சியாக மாற்றிய கீதா ஜீவன் குடும்பம் வெட்கப்பட்டு ஊரை காலி செய்து ஓட வேண்டும்

NomanSep 13, 2017 - 02:49:49 PM | Posted IP 82.19*****

During DMK Govt, They initiated many good schemes, and peoples felt happy to say that we are Tuticorinans, also Untill Jayalalitha period she like to do something good to this City, but today we are almost behind to some 15 or 20years old situation. Govt invested in many good things like underground drainage etc, but it was not properly implemented because of the functionaries in the Govt. officers. finally total blame on the ADMK or DMK, People need to raise their voice against the Corporation officers, PWD officers, RTA officers, their responsibility also there, Collector need to investigate... but our collector asked us to Play in the Happy Street, Any one can say today its a Happy Street, Simply we are blaming the politicians that is the backdrop of public awareness. . .

உண்மைSep 13, 2017 - 01:51:50 PM | Posted IP 122.1*****

திமுகவின் சாதனை! மாநகராட்சி!

ராஜாராம்Sep 13, 2017 - 01:40:39 PM | Posted IP 122.1*****

சபாஷ் சரியான செய்தி. கமிசனர் மக்கல் பிரச்னைகலை தீர்க்காமல். ஹேப்பி ச்ட்ரீட் கொண்டாடுவது கன்டிக்கத்தக்கது.

பெரியசாமிSep 13, 2017 - 12:36:50 PM | Posted IP 61.2.*****

கூடாது கூடாது நகராட்சியாக மாற்றக்கூடாது. ஊராட்சியாகவோ அல்லது சிற்றூராட்சி ஆகவோ மாற்றலாம்

மக்கள்Sep 13, 2017 - 11:42:03 AM | Posted IP 157.5*****

மாநகராட்சி ஆணையர் அவர்கள் இப்போது ஹாப்பி ஸ்ட்ரீட் டயஸ் நடத்துங்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD
Thoothukudi Business Directory