» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஹென்றி உட்பட 15பேர் மீது போலீஸ் வழக்கு பதிவு : இபிஎஸ் - ஓபிஎஸ் உருவபொம்மை எரித்த 2பேர் கைது

புதன் 13, செப்டம்பர் 2017 11:16:06 AM (IST)

துாத்துக்குடியில் முதல்வர், துணை முதல்வர் உருவ பொம்மையை எரிந்த 15பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் அணியினர் நடத்திய பொதுக்குழுவில் சசிகலா மற்றும் டிடிவி தினகரனை அதிமுகவில் இருந்து நீக்கியதைக் கண்டித்து தூத்துக்குடி 3வது மைல் பகுதியில் அதிமுக அம்மா அணி மாவட்ட செயலாளரும், முன்னாள் நகர தலைவருமான இரா. ஹென்றி தலைமையில் முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரது உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

இந்நிலையில், முதல்வர் மற்றும் துணை முதல்வரின் கொடும்பாவியை எரித்த விவகாரத்தில் தினகரன் ஆதரவாளர்களான தூத்துக்குடி சண்முகபுரத்தைச் சேர்ந்த ரமேஷ் கிருஷ்ணன், 3வது மைல் பகுதியைச் சேர்ந்த இசக்கி செல்வம் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அதிமுக (அம்மா) அணி மாவட்ட செயலாளர் ஹென்றி உட்பட 15பேர் மீது தென்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


crescentopticals
Friends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory