» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் இடி மின்னலுடன் பலத்த மழை

புதன் 13, செப்டம்பர் 2017 10:23:41 AM (IST)தூத்துக்குடியில் இன்று காலை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. ரோடுகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, கயத்தாறு, கடம்பூர், மணியாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் பருவமழை தொடங்கினாலும், தூத்துக்குடி நகர்ப்பகுதிகளில் மழைக்காக மக்கள் காத்திருந்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை 2 மணி முதல் திடீரென மழை பெய்தது. தொடர்ந்து காலை 6 மணியளவில் மீண்டும் மழை பொழிந்தது. 

லேசான மழையாகத் துவங்கி பின்னர் இடி மின்னலுடன் பலத்த மழையாக மாறியது. காலை 8.15 மணி வரை நேரம் மழை நீடித்தது. மழை காரணமாக தூத்துக்குடி நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக மாறியுள்ளது. புதுக்கிராமம் பகுதியில் வேப்ப மரக்கிளை முறிந்து மின் வயர் மீது விழுந்தது. இதனால் சில மணி நேரம் மின்சாரம் தடைபட்டது. ஒரே நாளில் கொட்டித்தீர்த்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மழை தொடரும் பட்சத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தால், தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdscrescentopticalsFriends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory