» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் எஸ்ஐ தாக்கியதில் லாரி டிரைவர் காயம்

செவ்வாய் 12, செப்டம்பர் 2017 12:13:43 PM (IST)

தூத்துக்குடியில் போலீஸ் எஸ்ஐ தாக்கியதாக லாரி டிரைவர் ஒருவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

திருப்பூரில் இருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த லாரியை விளாத்திகுளம் அருகே உள்ள வேடப்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் மணிகண்டன் ஓட்டிவந்தார். தூத்துக்குடியில் 4 வழிச்சாலையில்,  தனியார் தொழிற்சாலை அருகே லாரியை நிறுத்தினராம். அப்போது அங்குவந்த சிப்காட் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்துமாலை லாரியை நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தக்கூடாது என்று கண்டித்தாராம்.

மேலும், இது தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்துள்ளதாக தெரிவித்தாராம். இதனால், லாரி டிரைவருக்கும் எஸ்ஐக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, லாரி டிரைவரை எஸ்ஐ லத்தியால் தாக்கினாராம். இதில், காயம் அடந்த லாரி டிரைவர் மணிகண்டன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லாரி டிரைவரை தாக்கிய எஸ்ஐ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிரைவரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து

santhoshSep 13, 2017 - 11:15:39 AM | Posted IP 157.5*****

எஸ் ஐ பெயரையும் பதிவு செய்யுங்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

CSC Computer Education

New Shape Tailors

Pop Up Here


Universal Tiles Bazar

selvam aqua


Johnson's EngineersNalam PasumaiyagamThoothukudi Business Directory