» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருமண வீட்டில் செல்லப்பாண்டியன் - ஹென்றி மோதல் : அதிமுகவில் பரபரப்பு

ஞாயிறு 10, செப்டம்பர் 2017 7:28:37 PM (IST)

அதிமுக நிர்வாகி திருமண வீட்டில் அதிமுக பொதுக்குழு சம்பந்தமாக செல்லப்பாண்டியன் மற்றும் ஹென்றி இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் 12 ம் தேதி நடைபெறுகிறது என முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் அறிவித்துள்ளார்கள். இதில் துாத்துக்குடி மாவட்டத்தில் 12 ஒன்றிய செயலாளர்கள் பேருர் கழக செய லாளர்கள் 19 பேர்,2 நகர செயலாளர்கள்,4 பகுதி கழக செயலாளர்கள், பொதுக் குழு உறுப்பினர் 6 பேர், செயற்குழு உறுப்பினர்கள் 2 பேர் சிறப்பு அழைப்பாளர்கள் பாெதுக்குழுவுக்கு செல்வார்கள்.

இந்நிலையில் இன்று துாத்துக்குடி அண்ணா நகர் தாெழிற்சங்க தலைவர் டாக் ராஜா இல்ல திருமண விழா நடைபெற்றது.இதில் மணமக்களை வாழ்த்த வந்த எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் அணிகளை சேர்ந்த சித செல்லப்பாண்டியன் மற்றும் சண்முகநாதன் எம்எல்ஏ,தினகரன் அணி மாவட்ட செயலாளர் ஹென்றி ஆகியோர் இடையே பொதுக்குழு சம்பந்தமாக மோதல் ஏற்பட்டது. பொதுக்குழு செல்ல நாளை வாகனம் தயாராக இருக்கிறது.

எனவே பொதுக்குழுவில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என செல்லப்பாண்டியன் கூறினார். ஆனால் ஹென்றி கூறுகையில் பொதுக்கு ழுவுக்கு யாராவது சென்றால் கட்சியை விட்டு நீக்கப்படுவீர்கள். எனவே பொதுக் குழுவுக்கு யாரும் செல்லக்கூடாது என்றார்.திருமண விழாவில் நடந்த இந்த பிரச்சனையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


மக்கள் கருத்து

ManithanSep 14, 2017 - 02:23:12 PM | Posted IP 115.2*****

ஒய் கணேஷ் ஜாதியபதி பேசாத ...

பெருமாள்Sep 11, 2017 - 05:19:25 PM | Posted IP 125.1*****

தினகரன் அடிமைகள் பிஜேபி -க்கு ஜனாதிபதி தேர்தலில் ஒட்டு போட்டது எதில் சேரும்

உண்மைSep 11, 2017 - 04:50:16 PM | Posted IP 202.7*****

நியாயத்தின் பக்கம் நிற்கிறார் ர. ஹெண்ட்ரி .தினகரனிடம் பதவியை கேட்டு பெற்றவர்கள் அவருக்கு தூரோகம் செய்கிறார்கள் .இதுதான் உண்மை .இதுதான் வரலாறு .

டீச்சர்Sep 11, 2017 - 04:12:39 PM | Posted IP 125.1*****

தினகரன் ஆட்கள் ஜனாதிபதி தேர்தலில் பிஜேபி - க்கு ஒட்டு போட்டது மறந்து போய்விட்டதா

வாத்தியார்Sep 11, 2017 - 03:36:23 PM | Posted IP 103.2*****

வெவரம் தெரிஞ்சவன் TTV க்கு ஆதரவு பண்ணுவான் .. சி.தா கூட சுத்துறவன் லான்... நாட்டை பாசிச பாஜகவுக்கு அடகு வைக்க போறான் ..

ஒருவன்Sep 11, 2017 - 03:00:28 PM | Posted IP 61.3.*****

விடுங்கப்பா ,. திருமண வீட்டிற்கு சென்றால் நல்லது , கெட்டது என்று பாராமல் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் .. வம்பு எதற்கு ??

கணேஷ்Sep 11, 2017 - 01:15:35 PM | Posted IP 171.6*****

வர வர தூதுக்குடில அரசியல்ல நாடார்கலை தவிர்த்தால் நலமாக இருக்கும்.

மணிSep 11, 2017 - 10:00:32 AM | Posted IP 171.4*****

ஹென்றி எப்போதுமே தப்பான முடிவையே எடுக்கிறார்

மக்கள்Sep 11, 2017 - 09:56:07 AM | Posted IP 168.2*****

ஹன்றி அவர்கள் மக்களலாலும் அம்மாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவருடன் கூட்டணி இவர் அரசியல் வாழ்க்கை (பணத்துக்காக எதையும் செய்யலாம் என்கிற வாழ்க்கை)???????????

சாமிSep 10, 2017 - 08:53:17 PM | Posted IP 59.93*****

தினகரன் கொடுத்த காசுக்கு கூவுகிறார்

சாமிSep 10, 2017 - 08:46:43 PM | Posted IP 59.93*****

கட்சியில் இருந்து துரத்தப்பட்ட தினகரனுக்கு வக்காலத்து வாங்கும் இவரெல்லாம் ஒரு --- சீ

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticalsThoothukudi Business Directory