» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி சிவன் கோவில் மஹாகும்பாபிஷேகம் கோலாகலம் : லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

வெள்ளி 8, செப்டம்பர் 2017 10:13:13 AM (IST)தூத்துக்குடி அருள்மிகு அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் மஹாகும்பாபிஷேகம் இன்று காலை நடந்தது.

தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் என்று அழைக்கப்படும் சிவன் கோவிலில் கடந்த 2003ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது.  14 ஆண்டுகளுக்குப் பின்பு சிவன் கோவிலில் புனராவர்த்தன ஜுர்ணோத்தாரள அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் இன்று காலை 7.25மணிக்கு நடந்தது. இதையொட்டி சிவன் கோவிலில் உள்ள அனைத்து ராஜகோபுரம், விமானங்கள், மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளும் பலகோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டது. 

மகா கும்­பா­பி­ஷே­கத்தை முன்னிட்டு அதி­காலை 3.30 மணிக்கு நான்­காம் கால யாக­சாலை பூஜை, நாடி சந்­தா­னம், ஸ்பர்­ஸா­குதி, காலை ஐந்­தரை மணிக்கு மகா பூர்­ணா­ஹூதி, யாத்­ரா­தா­னம், கடம் எழுந்­த­ரு­ளல் நடந்த‌து. இதன் பின்­னர் தொடர்ந்து சங்­க­ர­ரா­மேஸ்­வர், பாகம்­பி­ரி­யாள், பரி­வார மூர்த்­தி­கள், விமா­னங்­க­ளுக்கு சிறப்பு பூஜை­கள் நடந்தது. 7.25 மணிக்கு அருள்மிகு ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் இராஜகோபுரம், விமானங்கள் மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு ஹரஹர சிவசிவா கோஷம் முழங்க மஹா கும்பாபிஷேகம் நடந்தது. கும்­பா­பி­ஷேக நீர் பக்­தர்­க­ளுக்கு தெளிக்­கப்­பட்டது. இன்று இரவு 7 மணிக்கு சுவாமி அம்பாள் திருக்கல்யாணம், மற்றும் அதனைத் தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடக்கிறது.  கும்பாவிஷேகத்தை லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்தனர். மதுரை சித்திரைத் திருவிழாவை நினைவுப்படுத்தும் வகையில், நான்கு ரத வீதிகளிலும் மக்கள் வெள்ளமாக காட்சி அளித்தது. கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி, வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ, மாவட்ட எஸ்.பி. மகேந்திரன், இணை ஆணையர் பரஞ்ஜோதி, கோவில் நிர்வாக அதிகாரி அஜித், முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன், திருப்பணி கமிட்டி தலைவர் பி.எஸ்.எஸ்.கே. ராஜா சங்கரலிங்கம், செயலாளர் பழரசம் விநாயகமூர்த்தி, பொருளாளர் விவேகம் ரமேஷ், துணைத் தலைவர் ஏ.வி.எம்.மணி, டி.ஏ.சில்க் அதிபர் டி.ஏ. தெய்வநாயகம், அபிராமி சந்திரசேகர், சி.எம். பள்ளி தாளாளர் ஆ.திருச்சிற்றம்பலம், முன்னாள் அறகாவலர் குழுத் தலைவர் ஏ.கோர்ட்டு ராஜா, திருநாவுகரசு, பி.எஸ்.கே. ஆறுமுகம், சரவணாஸ் செந்தில் ஆறுமுகம், வேளக்­கு­றிச்சி, பூனம்­பட்டி ஆதி­னம் உள்­ளிட்ட பல்­வேறு ஆதின சுவா­மி­கள், தமி­ழ­கத்­தின் பல்­வேறு ஸ்தலங்­க­ளில் இருந்து ஏரா­ள­மான சிவாச்­சா­ரி­யார்கள் கலந்து கொண்ட‌­னர். மகா கும்­பா­பி­ஷே­கத்தை ஒட்டி மாவட்­டத்­திற்கு உள்­ளூர் விடு­முறை அளிக்கப்பட்டிருந்தது.

டூட்டி ப்ளஸ் சிறப்புமலர் வெளியீடு தூத்துக்குடி சிவன் கோவில் மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விழாவிற்கு வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு டூட்டி ப்ளஸ் சார்பில் பாகம்பிரியாள் சங்கரராமேஸ்வரர் புளோ அப் படத்துடன் சிறப்புமலர் வெளியிடப்பட்டது. 


மக்கள் கருத்து

ASHOKKUMARSep 9, 2017 - 02:47:22 PM | Posted IP 103.3*****

ஓம் நமசிவாய

VENKYSep 8, 2017 - 05:29:35 PM | Posted IP 115.2*****

SHIVAYA NAMAHA,BHAVAYA NAMAHA,SARVAYA NAMAHA,RUDHRAYA NAMAHA,AADHMAAYA NAMAHA.

உண்மைSep 8, 2017 - 04:53:28 PM | Posted IP 122.1*****

உலகை ஆளும் சிவனே போற்றி! ஜெய் ஹிந்த்!

சங்கர்Sep 8, 2017 - 04:26:48 PM | Posted IP 61.2.*****

ஓம் நமசிவாய ஓம் பராசக்தியே போற்றி

Ram karthiSep 8, 2017 - 04:13:20 PM | Posted IP 14.14*****

om namasiviya

சிவதொண்டன்Sep 8, 2017 - 02:04:09 PM | Posted IP 122.1*****

அந்த ஐயங்கார் சாமீ என்ன செய்ய்துகொண்டு இருக்கார்? எத்தனயோ லட்ச மக்கள் கீழ நின்று தரிசனம் செய்யும் பொது அவர் ஒரு உயர் சாதிக்கார்ரர் என்பதால் அவர் மட்டும் மேல சென்றுள்ளார் எப்படி ? இதனை ஏன்? திருக்கோவில் நிர்வாக அதிகாரி கேட்கவில்லை ? சாதிய வன்முறை தொடர்கிறதா ?

தமிழன்Sep 8, 2017 - 01:14:01 PM | Posted IP 180.2*****

ஓம் நமசிவாய ...ஓம் நமசிவாய .... தென்னன்னாடுடைய சிவனே போற்றி ... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி .....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


selvam aqua

Universal Tiles BazarNew Shape Tailors

Johnson's Engineers

Thoothukudi Business Directory