» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஹேப்பி ஸ்ட்ரீட் புதுமை நிகழ்ச்சி துவக்கம் : குழந்தைகள் உற்சாகம்

ஞாயிறு 3, செப்டம்பர் 2017 9:24:59 AM (IST)தூத்துக்குடியில் மாநராட்சி அலுவலகம் முதல் குரூஸ் பர்னாந்து சிலை வரையிலான பிரதான சாலையில் "ஹேப்பி ஸ்ட்ரீட்" கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் உள்ள பெரும்பாலான சாலைகள் போக்குவரத்து நெரிசலால் மக்களால் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியாத வகையில் உள்ளன. அந்த சாலைகளை மக்கள் சுதந்திரமாகப் பயன்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை ஹேப்பி ஸ்ட்ரீட் என்ற நிகழ்ச்சிக்கு மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது. 

மாவட்ட ஆட்சியர் பொறுப்பு வீரப்பன் இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். சார் ஆட்சியர் தீபக் ஜேக்கப், டிஎஸ்பி சீமைச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். வண்டியே வராது, வந்து விளையாடு என்ற முழக்கத்துடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் யோகா, சிலம்பாட்டம், டான்ஸ், பல்வேறு வகையான உடற்பயிற்சி விளையாட்டுகள் என விதவிதமான நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. சிறுவர், பெரியவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டு, ஊக்குவிக்கப்பட்டனர்.மேலும், தூய்மை தூத்துக்குடி திட்டம், டெங்கு விழிப்புணர்வு, பாலிதீன் ஒழிப்பு, மழைநீர் சேகரிப்பு என பல்வேறு விழிப்புணர்வு ஓவிய கண்காட்சிகளும் நடைபெற்றது. தூத்துக்குடி மாநகராட்சியில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்நிகழ்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். இதில் ஏராளமான குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியை முன்னிட்டு காலை 6 மணி முதல் 8.30 மணி வரை போக்குவரத்து தடைசெய்யப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு சிறிது சிரமத்தை ஏற்படுத்தியது. 


மக்கள் கருத்து

உண்மைSep 5, 2017 - 01:51:16 PM | Posted IP 59.99*****

கொசு நல்லதுன்னு புரோகிராமு நடத்துறது நீதானே டுமில்செல்வா?

ராஜேஷ்Sep 5, 2017 - 10:54:00 AM | Posted IP 157.5*****

தமிழ்செல்வம் சரியாக சொன்னீர்கள்

தமிழ்ச்செல்வன்Sep 3, 2017 - 08:04:19 PM | Posted IP 117.2*****

தூத்துக்குடி மாநகராட்சியின் செயல்பாடுகளால் மக்கள் மிகவும் கோபத்தில் இருக்கும் இந்த நேரத்தில் வா.. வந்து ரோட்டில் விளையாடு... என்றால் இந்த திட்டம் மக்கள் மத்தியில் வரவேட்பு பெறாது. கமிஷனருக்கு வேண்டுமானால் பெரிய சாதனையாக தெரியலாம். எங்களுக்கு இது கோமாளி கூத்தாகத்தான் தெரிகிறது. பிரதமரே கோமாளி கூத்து அடிக்கும்போது கமிஷனர் ஜுஜுபி...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

CSC Computer Education

selvam aqua

Universal Tiles Bazar

New Shape Tailors


Nalam PasumaiyagamSterlite Industries (I) Ltd

Johnson's Engineers
Thoothukudi Business Directory