» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் திமுக வழக்கறிஞரின் கார் எரிப்பு : நள்ளிரவில் பரபரப்பு

திங்கள் 28, ஆகஸ்ட் 2017 8:56:38 AM (IST)தூத்துக்குடியில் திமுக வழக்கறிஞரின் கார் மர்ம நபர்களால் தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மீனாட்சிபுரம் 2வது தெருவைச் சேர்ந்தவர் நாகப்பன் மகன் சுரேஷ்குமார் (45). வழக்கறிஞர்., தூத்துக்குடி மாவட்ட திமுக வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளராக உள்ளார். திருச்செந்தூர் எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளர். இவரது வீட்டில் நேற்று நள்ளிரவு 12 மணியவில் சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் எழுந்துள்ளனர். அப்போது வீட்டின் முன் நிறுத்தியிருந்த அவரை காரை மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீவைத்துவிட்டு தப்பியோடிவிட்டனர். இதனால் கார் மளமளவென தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. 

இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வாகனம் வந்து தீயை அணைத்தது. ஆனாலும், காரின் முன்பகுதி எரிந்து சேதமானது. கார் அருகே பெட்ரோல் கொண்டு வந்த பாட்டில் கிடந்தது. சம்பவம் குறித்து தகவல் அறிந்து டவுண் ஏஎஸ்பி செல்வன் நாகரத்தினம், மத்தியபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர், சப் இன்ஸ்பெக்டர் ரவிகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தொழில் போட்டி அல்லது கட்சி விவகாரத்தில் அவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? என மத்தியபாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அ்பபகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Adsselvam aqua

New Shape TailorsJohnson's Engineers

Universal Tiles Bazar
Thoothukudi Business Directory