» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஹேப்பி ஸ்டீரீட்: வண்டியே வராது.. வந்து விளையாடு..! புதுமை நிகழ்ச்சி செப்.3-ல் அறிமுகம் - ஆணையர் பேட்டி

வியாழன் 24, ஆகஸ்ட் 2017 5:27:29 PM (IST)தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் "ஹேப்பி ஸ்டீரீட்" என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 3ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை)நடைபெறுகிறது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி மாநகர் பகுதியில் உள்ள பெரும்பாலான சாலைகள் போக்குவரத்து நெரிசலால் மக்களால் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியாத வகையில் இருக்கின்றன. இந்த சாலைகளை சுதந்திரமாகப் பயன்படுத்தும் வகையில் ஒவ்வொரு முதல் ஞாயிற்றுக்கிழமையும் "ஹேப்பி ஸ்டீரீட்" என்ற நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. இதையொட்டி புதிய மாநகராட்சி அலுவலகம் முதல் குரூஸ் பர்னாந்து சிலை வரையில் உள்ள சாலையில் காலை 7 முதல் 10 மணி வரை போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படும். 

அன்றைய தினம் மாநகராட்சி சார்பில் பொதுமக்களை மகிழ்விக்கும் வகையில் குழந்தைகளுக்கான விளையாட்டுகள், ஸ்கேட்டிங், நடனம், யோகா போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். மேலும், தூய்மை பாரத இயக்கம், டெங்கு விழிப்புணர்வு, பாலிதீன் ஒழிப்பு, மழைநீர் சேகரிப்பு என பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். "வண்டி வராது, வந்து விளையாடு" என்ற புதுமையான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என்றார். பேட்டியின் போது மாநகராட்சி சுகாதார அதிகரி பிரதீப் குமார், முதுநிலை நகரமைப்பு அலுவலர் ராக்கப்பன், உதவி செயற்கொறியாளர் சுப்புலட்சுமி, உதவி பொறியாளர் ரவிநாதன், ஆணையரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து

தமிழ்ச்செல்வன்Aug 26, 2017 - 10:13:32 AM | Posted IP 160.2*****

மாநகராட்சியில் செய்ய வேண்டிய முக்கியமான வேலை, களையெடுக்க வேண்டிய வேலை எவ்வளவோ இருக்கிறது. அதை எல்லாம் விட்டு விட்டு வா, வந்து விளையாடு என்றால் கோமாளி கூத்தாக இருக்கிறது. கமிஷனர் மோடிக்கு தம்பியாக இருப்பாரோ?

Rajesh JeyapaulAug 25, 2017 - 02:07:47 PM | Posted IP 122.1*****

good initiative..enables us to have a social activity and something different from regular..this will help us to realize how much stressed we are due to vehicular noise and air pollution..good luck to the event..similarly we should plan for cycle day where office goers and business owners are encouraged to use cycle to work..

ஜோல்னா பையன்Aug 25, 2017 - 09:54:33 AM | Posted IP 27.62*****

இதனால் என்ன பயன் சார் .அந்த தெரு திரும்ப சுத்தமாயிருமா ?

maniAug 25, 2017 - 01:53:48 AM | Posted IP 117.2*****

பஸ்ஸ்டாண்ட்?

ஒருவன்Aug 24, 2017 - 06:19:54 PM | Posted IP 117.2*****

சூப்பர்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors

Pop Up Here

Nalam Pasumaiyagam


CSC Computer EducationBlack Forest Cakes

Johnson's Engineers

Universal Tiles Bazar

selvam aquaThoothukudi Business Directory