» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ரூ.24கோடி போதை பொருள் பறிமுதல்: படகில் தப்பிய 3பேர் யார்? ஆட்டோ டிரைவர் சிக்கினார்

செவ்வாய் 22, ஆகஸ்ட் 2017 10:53:06 AM (IST)

தூத்துக்குடியில் ரூ.24 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு வந்த நபர் உட்பட 3பேர் படகில் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை வழியாக இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திரேஸ்புரம் முதல் தாளமுத்துநகர் வரையில் கடற்கரை பகுதியில் அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தாளமுத்துநகர் கடற்கரை மொட்டை கோபுரம் அருகே ஒரு ஆட்டோ வந்தது. அதில் இருந்து கையில் பையுடன் இறங்கிய நபர், கடற்கரை நோக்கி சென்றார். 

அப்போது சங்க இலாகா அதிகாரிகள் அவரை நிற்குமாறு கூறியதும், அவர் ஓட்டம் பிடித்தார். அப்போது அவர் வைத்திருந்த பை தவறி விழுந்தது. இதையடுத்து அந்த நபர் பையை அங்கேயே விட்டுவிட்டு, கடலுக்குள் ஓடினார். அப்போது கடலில் தயராக நின்ற படகில் வந்த 2பேருடன் அவர் தப்பிச் சென்றார். இதையடுத்து சுங்க இலகாவினர் வானத்தை நோக்கி 5முறை துப்பாகியால் சுட்டனர். ஆனால், படகு நிற்காமல் சென்றுவிட்டது. இதையடுத்து அந்த நபர் விட்டுச் செனற் பையை சோதனையிட்டபோது, அதில், 24 கிலோ தடை செய்யப்பட்ட அசிப் எனும் போதைப் பொருள் இருப்பது தெரியவந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.24 கோடி ஆகும். 

இது தொடர்பாக ஆட்டோ டிரைவர் ஆண்ணாநகர் 10வது தெருவை்ச சேர்ந்த ரமேஷ் என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். அவர் போதைப் பொருள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது எனவும், அண்ணா நகரில் இருந்து அந்த நபரை சவாரி அழைத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். படகில் ஏறி தப்பியவர் தூத்துக்குடி அண்ணா நகர் 7வது தெருவைச் சேர்ந்த மீராசா மகன் தர்ஷாகீர் (68) என்பது தெரியவந்தது. இவர் மீது எற்கனவே பல்வேறு போதைப் பொருள் கடத்தல் வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. படகில் வந்தவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்களா?, அல்லது தூத்துக்குடியைச் சேர்ந்தவர்களா? என விசாரணை நடந்து வருகிறது. இதுகுறித்து கடலோரக் காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

crescentopticals
Friends Track CALL TAXI & CAB (P) LTD
Thoothukudi Business Directory