» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தடையை மீறி ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை : நிலத்தடி நீர் கொள்ளையை கண்டித்து போராட்டம்

திங்கள் 21, ஆகஸ்ட் 2017 12:48:45 PM (IST)தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் தொழிற்சாலைகளின் நிலத்தடி நீர் கொள்ளையைக் கண்டித்து தடையை மீறி ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்திய நூற்றுக் கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.. 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தினமும் 10 கோடி லிட்டருக்கும் மேல் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சி எடுக்கப்பட்டு லாரிகள் முலம் விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் குடிநீருக்காகவும், விவசாயத்திற்கும், கால்நடைகளுக்கும் தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வரும் வேளையில் மக்களை காக்க வேண்டிய மாவட்ட ஆட்சியரும், ஊரக வளர்ச்சி, வருவாய், வன, காவல் துறை அதிகாரிகள் தங்கள் அலுவலகம் முன்பு சாலைகளில் தண்ணிர் சட்ட விரோதமாக திருடி எடுத்து செல்வதை கண்டும் காணாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இதனைக் கண்டித்து நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பான சூழல் நிலவி வந்தது. இந்நிலையில், பிரதான நுழைவு வாயில் வழியாக பேராசிரியை பாத்திமாபாபு தலைமையில் போராட்டக்குழுவினர் நுழைய முயன்றனர். அப்போது ரூரல் டிஎஸ்பி சீமைச்சாமி தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, இந்த வழியாகச் செல்லக்கூடாது என்று கூறினர். இதனால் டிஎஸ்பியுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இதனைப் பயன்படுத்திய நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த மற்றொரு போராட்டக் குழுவினர் முகிலன் தலைமையில், கார்கள் மூலம் மேற்கு வாசல் வழியாக கோஷமிட்டவாறு ஆட்சியர் அலுவலகத்தின் நுழைந்து முற்றுகையிட்டனர். ஆட்சியர் அலுவகத்திற்குள் போராட்டக்குழுவினர் நுழைந்ததால் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. இதையடுத்து முன்பக்கத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்த   போராட்டக்குழுவினரை வெளியே இழுத்துச் சென்றனர். பின்னர் அவர்களை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். 

தடையை மீறி ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தியதாக, தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க முகிலன், ஆம் ஆத்மி மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் குணசீலன், பேராசிரியை பாத்திமா பாபு, நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்க நிர்வாகி புதுக்குடி ராஜா,  தீக்கட்சி மாநில நிர்வாகி இசக்கிராஜா, விவசாயிகள் அணி நிர்வாகி ஜோதி மணி, அருண் காந்தி, நாம் தமிழர் நிர்வாகி வேல்ராஜ், சமூக ஆர்வலர் அக்ரி பரமசிவம், உட்பட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு, தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

போலீசாருக்கு டிமிக்கு காட்டிய போராட்டக்குழுதூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று போாட்டத்தை முன்னிட்டு 4 நுழைவு வாயில் பகுதிகளிலும் டிஎஸ்பி சீமைச்சாமி தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. போலீசார் போராட்டக்குழுவின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தபோது, சிலர் மட்டும் முன்புற நுழைவு வாயிலாக முற்றுகையிட முயன்றனர். அப்போது போலீசுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை பயன்படுத்தி, பெரும்பாலானோர் தனித்தனியாக கார்கள் மூலம் மற்றொரு நுழைவு வாயில் வழியாக ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்து போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. கார்களில் வந்தவர்கள் எஸ்பி அலுவலகத்திற்கு செல்வதாக கருதி, போராட்டக்குழுவின் வாகனங்களை போலீசார் கோட்டை விட்டதாகத் தெரிகிறது. 


மக்கள் கருத்து

கேAug 23, 2017 - 06:05:01 PM | Posted IP 122.1*****

திரு. முத்து இஸ்மாயில் அவர்களே, உங்கள் பதிவு அருமை. ஆனால் அவர்களெல்லாம் அவ்வாறு நினைப்பது இல்லை. பணம் இருந்தால் போதும் என்ற நினைப்பில் வாழும் 4 அறிவு உயிரினங்கள் அவர்கள். நீங்கள் சொல்வது போல் கட்டாயம் நடக்கும்.

மை. அண்டோAug 21, 2017 - 06:01:27 PM | Posted IP 117.2*****

அநீதிக்கு துணை போகும் அரசு அதிகாரியால் நாடு சீரழிகின்றது. நம் குடும்பத்தில் நேர்மையான அரசு அதிகாரிகளை உருவாக்குவோம்.

AAPAug 21, 2017 - 04:54:57 PM | Posted IP 27.62*****

ஒரு ஆழ்துளை கிணறு பம்புகள் இருந்தால் லாரிகளுக்கு தண்ணீர் விற்பனை செய்து நாள் ஒன்றுக்கு ரூ 10,000/- சம்பாதிக்கலாம் இதற்கு GST வரி கிடையாது வருமான வரி கிடையாது இதுதான் இன்றைய தூத்துக்குடி நிலை

அசோக்குமார்Aug 21, 2017 - 04:32:19 PM | Posted IP 101.2*****

இப்போது முழித்து கொண்டு மற்ற நீராதாரங்களையும் மீட்க வேண்டும்..

தூத்துக்குடி சம்சுதீன்Aug 21, 2017 - 02:58:29 PM | Posted IP 109.8*****

வாழ்த்துகள் உங்கள் பணி சிறக்க என்றென்றும் ஆதரவுடன் தூத்துக்குடி சம்சுதீன்

முத்து இஸ்மாயில் - காயல்பட்டினம்.Aug 21, 2017 - 02:23:49 PM | Posted IP 157.5*****

நிலத்தடி நீரை திருடுவோரும் சரி திருடுவோருக்கு ஆதரவாக இருப்போரும் சரி அனைவரும் ஒரு நாள் குடிக்க நீர் இல்லாமல் தொண்டை வருண்டு தண்ணி தண்ணீர் கூக்குரலிட்டு துடித்து சாவது உறுதி.. இது விரைவில் நடக்கும்....!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored AdsCSC Computer Education

New Shape Tailors

Universal Tiles Bazar


Johnson's Engineers

Nalam Pasumaiyagam


selvam aqua

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory