» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இந்திய ஜூனியர் வாலிபால் அணி தகுதி சுற்றுக்கு சுரண்டை வீராங்கனை தேர்வு

வெள்ளி 19, மே 2017 8:21:05 PM (IST)




இந்திய ஜூனியர் வாலிபால் பெண்கள் அணியின் தகுதி சுற்றுக்கு சுரண்டை மாணவி தேர்வு பெற்றுள்ளார்.

உலக அளவிலான ஜூனியர் (பெண்கள்) வாலிபால் போட்டி வரும் ஜூன் மாதம் 16ம் தேதி முதல் சீனாவில் நடக்கிறது. இதில் கலந்து கொள்ளும் வீராங்கனைகளுக்கான தகுதி சுற்று போட்டி வரும் 23 மற்றும் 24ம் தேதிகளில் அவுரங்கபாத்தில் நடக்கிறது. இத்தகுதி போட்டியில் சிறப்பாக விளையாடும் 12 வீராங்கனைகள் இந்திய ஜூனியர் அணிக்காக உலக போட்டியில் விளையாடுவார்கள். இப்போட்டியில் நெல்லை மாவட்டம், சுரண்டை சிவகுருநாதபுரத்தை சேர்ந்த சசிகுமார் மகள் அனிஷா (18) உட்பட 5 பேர் தமிழகத்திலிருந்து கலந்து கொள்கின்றனர். 

தகுதி போட்டியில் கலந்து கொள்ளும் அனிஷாவை நெல்லை மாவட்ட கைப்பந்து கழகம் மற்றும் சுரண்டை காமராஜர் கைப்பந்து கழக கௌரவ தலைவர் தொழிலதிபர் எஸ்.வி.கணேசன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்தினர். உடன் இந்திய அளவில் தங்க பதக்கம் பெற்ற சுரண்டை மாணவிகள் தர்ஷினி, பிளஸ்ஸி ரஞ்சினி ஆகியோர் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers
jesus redeems

Sponsored Ads

Black Forest Cakes



Johnson's Engineers

Nalam Pasumaiyagam


New Shape Tailors



Panchai Dairy



CSC Computer Education

selvam aqua



Thoothukudi Business Directory